Asset-Allocation-FeaturedAsset-Allocation-Featured

அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே! கல்வியாளர்களே! அறிவு ஜீவிகளே! இளைஞர்களே!

உங்கள் முக்கியமான கவனத்திற்கு,  இந்திய ஒன்றிய அரசு பட்ஜெட் அறிவித்த நிலையில்.

  • ரூ 1,85,776.94 கோடி  மத்திய உள்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
  • ரூ 1,17,687.99 கோடி மத்திய உள்துறை, மத்திய காவல் துறைக்கு, சிவில் பணிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
  • ரூ 68,089.கோடி மீதமுள்ள தொகை. (அதில்)
  • ரூ 7,305.10 கோடி பேரிடர் மேலாண்மை துறைக்கும்.
  • ரூ 60, 784.23 கோடி யூனியன் பிரதேசங்களுக்கும். (அதில்)
  • ரூ 22,305.10 கோடி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கும் (அதில்)
    • ரூ 5,763.65 கோடி அந்தமான். (மக்கள் தொகை சுமார் 4 லட்சம்)
    • ரூ 5,379.கோடி சண்டிகர். (மக்கள் தொகை சுமார் 12 லட்சம்)
    • ரூ 1,421.50 கோடி லட்சதீவு. (மக்கள் தொகை சுமார் 68 ஆயிரம்)
    • ரூ 3,781.10 கோடி டையு டாமன். (மக்கள் தொகை சுமார் 10 லட்சம்)
    • ரூ 5,958 கோடி லடாக்.
  • ரூ 38,479.23, கோடி சட்டமன்றம் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும். (அதில்)
    • ரூ 1,168 கோடி டெல்லி. (மக்கள் தொகை சுமார் 2.1 கோடி)
    • ரூ 1,729 கோடி புதுச்சேரி. (மக்கள் தொகை சுமார் 15 லட்சம்)
    • ரூ 35,581.44 கோடி ஜம்மு காஷ்மீர். (மக்கள் தொகை சுமார் 1.35 கோடி)
  • ரூ 11476 கோடி டெல்லி காவல் துறைக்கு தனியாக  ஒதுக்கீடு.

இந்த நிதி ஒதுக்கீடு செய்த முறையை, புதுச்சேரி வாழ் பெருமக்களே! ஒருமுறைக்கு. இருமுறை படித்து பார்க்கவும். நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியும்.

இந்த தகவலை நம்மூர் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும். அனைவருக்கும் பகிரவும். இரண்டு நாட்களுக்கு இது தொடர்பான பதிவில். கடந்த வருடம் கிடைத்த அதே தொகைதான் புதுச்சேரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற யூனியன் பிரதேசங்கள் அனைத்துக்கும் அதிகமாக தரப்பட்டுள்ளது.

இதில், மத்தியில் ஆளும் அரசு, புதுச்சேரியில் ஆளும் அரசுடன் கூட்டணி வேறு.

இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், டெல்லிக்கு வெறும்
1168 கோடி, புதுச்சேரியை விட 582 கோடி குறைவு. ஆனால் அந்த டெல்லி அரசு தன் கையே தனக்குதவி என்று, பல ஊழல் வழிகளை தடுத்து, சொந்த வருமானத்தை பெருக்கி, மத்திய அரசிடம் பிச்சை எடுக்காமல், கௌரவமாக வாழ்ந்து வருகிறது

இதைதான், புதுச்சேரிஆம் ஆத்மி கட்சியும் சொல்கிறது. எங்களிடம் ஆட்சியை தாருங்கள் இருக்கும் நிலையிலேயே ஊழலை குறைத்து, நிர்வாகத் திறமையை மேம்படுத்தி பாண்டிச்சேரியை முன்னேற்றுவோம்.

மேலும், மாநில அந்தஸ்து பெறுவதற்காக மக்களை திரட்டி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, மாநில அந்தஸ்து பெற்று, புதுவை மாநிலத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலங்களில் ஒரு மாநிலமாக உருவாக்க ஆம் ஆத்மி கட்சியால் மட்டும் தான் முடியும்.

ஆம் ஆத்மி கட்சியின், மக்கள் விழிப்புணர்வுக்கான பதிவு.

தொகுப்பு

கோ ராமலிங்கம்.
மக்கள் கண்காணிப்பு குழு.

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »