தினம் தினம் அரசியல் பேசும் மக்கள், அந்த ஒரு நாள் செய்யும் தவறால், 5 வருடங்களுக்கு பதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நல்லவர் யார்?  கெட்டவர்கள் யார்? என்று முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தேர்தல் நேரத்தில் குழம்புகின்றனர். கட்சிகளை பொறுத்தவரை, கூட்டணி வைப்பதில் இருந்து, வேட்பாளர் நியமனம், வாக்குறுதிகளை தருவது வரை இறுதிவரை ரகசியம் காக்கப்படுகிறது.

யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் சேர்ந்து போட்டியிடலாம் என்ற நிலை. பணம் இருந்தால் போதும். இது அரசியல் வியாபாரிகளுக்கு மிகுந்த வசதியாக போய் விடுகிறது. மக்களுக்கு தெளிவான முடிவு எடுக்க சந்தர்ப்பம் அளிப்பது இல்லை.

தேர்தல் ஆணையம் அளிக்கும் அந்த ஒரு நாளில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா அமோகமாக நடைபெறுகிறது. யார் நல்லவர் என்பதை சிந்திப்பதை விட,  யார் அதிக பணம் கொடுத்தார் என்பதே, முக்கிய செய்தியாகிவிடுகிறது.
மக்களை அந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டனர், மகா பாவிகள்.

முதலில், இவர்கள் யார்? தங்களை சட்டத்தில் இருந்து பாதுகத்துகொல்வது, தாங்கள்  தவறான வழியில் சேர்த்த சொத்துக்களை பாதுகாப்பது, மேலும் சொத்துக்களை சேர்ப்பது, பதவி சுகத்திலும், மாலை மரியாதை என்ற போதை சுகத்திலும், மக்களை அடிமையாக வைத்து இருப்பது. இதில் மக்கள் தான் சிக்கி தவித்து சீரழிந்து வருகின்றனர்.

மாநிலமும் இதனால் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. மக்களுக்கு மாற்று வாய்ப்பு இல்லாததால்தான், இந்த இழி நிலை ஏற்படுகிறது. இதில் மக்கள் மீது குற்றம் சுமத்தி எந்த பலனும் இல்லை.

2013 வரை டில்லி மாநிலத்தில் இதே நிலை தான் இருந்தது.

பாஜகவும், காங்கிரஸும், பல ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள். தேர்தலுக்கு தேர்தல் பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள். இதனால் சீரழிந்தது டில்லி மக்கள் மட்டும் அல்ல, டில்லி மாநிலமும் தான். இந்த நேரத்தில், ஊழலை ஒழிப்போம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து, புள்ளி விவரத்தோடு ஊழல் பட்டியலை வெளியிட்டார், திரு அரவிந்த் கெஜ்ரிவால். இளைஞர்கள் படை திரண்டது. சாமானிய மக்களின் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவானது. மக்கள் ஆதரவுடன், புதிய வளர்ச்சி திட்டங்களுடன், டில்லி மாநில வளர்ச்சி, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என மக்களை தேர்தலில் சந்தித்தது.

அந்த தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும், பணத்தை வாரி வாரி இறைத்தன. டில்லி மக்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். நமக்கு ஒரு நல்ல கட்சி வந்து விட்டது. இது சாமானிய மக்களின் கட்சி. இதன் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. இதற்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று திடமான முடிவு எடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் அதைப் புறந்தள்ளி, புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியை டில்லி மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் அந்த தேர்தலில் தோற்றுப் போனார். மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களில் அமோக வெற்றி பெற்றது, ஆம் ஆத்மி கட்சி.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

மக்கள் மிகவும் நல்லவர்கள், அறிவாளிகள், சரியான முடிவை எடுப்பவர்கள், சரியான கட்சி இல்லாததால், தான் புதுச்சேரிக்கு இந்த நிலை. இப்போது டெல்லியை போல் புதுச்சேரியிலும் ஆம் ஆத்மி கட்சி, புதிய திட்டங்களுடன், புதிய வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க, புதுச்சேரி மக்களை நாடி வருகிறது.

இளைஞர்கள் நன்கு சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது. இளைஞர்கள் தங்கள் சக்தியை பயன்படுத்தி, இளைஞர்கள் படையை திரட்ட வேண்டும். ஊழலை ஒழிக்கவும், நேர்மையான, தூய்மையான, துணிச்சலான ஆட்சியை கொடுக்கவும்
ஆம் ஆத்மி கட்சி. தயாராக இருக்கிறது.

விரைவில் மக்களை நோக்கி அதன் பயணம் தொடரும். ஊழலை ஒழிக்க, நாட்டையும் வீட்டையும் சுத்தப்படுத்த துடைப்பத்தை கையில் எடுப்போம்.

பிப்ரவரி 27 ல் மாபெரும் கருத்தரங்கம்.

100 க்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒன்று திரட்டி. 11 கோரிக்கைகளை வலியுறுத்தி. ஆம் ஆத்மி கட்சி. முன் நின்று நடத்துகிறது. மக்களே உங்களுக்காக, உங்களை காப்பாற்ற, ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்குகிறது.

ஆதரவு தருக.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »