அன்பார்ந்த இளைஞர்களே, புதுச்சேரி வரலாறு சிறப்பு வாய்ந்தது.

  • வரலாற்று சிறப்பு மிக்கது.
  • போராட்ட வரலாறு நிறைந்தது.
  • தியாக தலைவர்கள் வாழ்ந்து மறைந்தது.
  • பாவேந்தர் பாரதி, வ. சுப்பையா ஆகியோர் வாழ்ந்து மறைந்தது.
  • சின்னஞ்சிறு அழகிய மாநிலம்.
  • பிரெஞ்சு கலாச்சாரம் கொண்டது.
  • அழகிய கடற்கரை.
  • நேரான சீரான சாலைகள்.
  • விவசாய நிலங்கள்.
  • ஏரிகள்.
  • குளங்கள்.
  • கண்மாய்கள்.
  • தென்னந் தோப்புகள்.
  • பள்ளி கூடங்கள்.
  • தங்கு தடையில்லா குடிநீர் வசதி.
  • மிக மிக குறைவான மிசார கட்டணம்.
  • தண்ணீர் தேங்காமல் கழிவு நீர் ஓடும் அமைப்பு.
  • பஞ்சாலைகள்.
  • கைத்தறி நெசவுத் தொழில்.
  • மீன் பிடி தொழில்.
  • விவசாயம்.
  • பாரம்பரிய தொழில்கள்.
  • அழகான கடைத் தெரு.
  • புகழ் பெற்ற திருக்கோயில்கள்.
  • அழகிய பூஞ்சோலை யாக இருந்தது.
  • ஆளும் கட்சி ஆளும் கட்சியாக இருந்தது.
  • எதிர்க்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது.
  • கம்யூனிஸ்டுகள், இளைஞர். மன்றங்கள், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள். அப்போது உண்மையாக செயல் பட்டன.
  • உண்மையான போராட்டங்கள் நடந்தன.
  • அரசாங்கம் போராட்டங்களை கண்டு அஞ்சி நடுங்கின.
  • அரசியலில் சூழ்ச்சி அரசியல் அப்போதும் இருந்தது.
  • விளைவு கம்யூனிஸ்டுகள் எதிர் வரிசையில் அமர்ர்ந்தாலும், அப்போது தங்கள் கடமையை சரிவர செய்தனர்.
  • மக்களின் அமோக ஆதரவும் இருந்தது.
  • அப்போது அரசியலிலும்,  ஆட்சியிலும், ஒரு நேர்மை இருந்தது.
  • சட்டமன்றம் வலுவான சட்டமன்றமாக செயல்பட்டது.
  • இப்போது போல பலவீனமடைந்த செத்தமன்றமாக இல்லை.
  • புதியதாக வளர்ச்சி திட்டங்கள் தொலை நோக்கு பார்வையோடு கொண்டு வரப்பட்டன.
  • தொழிற் பேட்டைகள் உருவாக்கப்பட்டன.
  • தமிழ்நாடு பகுதி ஆக்ரமிப்பு ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.
  • பிரெஞ்சு கலாச்சார பண்பாடு காரணமாக உயர் ரக மது பானங்கள் விற்பனை செய்ய பட்டாலும், ஏழைகள், தொழிலாளர்களுக்கு, கள் மற்றும் சாராயக் கடைகள் நடத்தப்பட்டன.
  • தமிழ்நாடு பகுதியில் இருந்து வருபவர்கள் கண்காணிக்க பட்டனர்.
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை.
  • கூட்டுறவு, கோவில் நிர்வாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் தலையீடு இல்லை.
  • ஊழல் என்பது ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.
  • உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்தது.
  • அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு நிர்வாகம் முறையாக, சரியாக, உண்மையாக நடந்தது.

இப்போது அப்படியா?

  • மாநில முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் சூழ்நிலை.
  • தலைமையே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, இவரை பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள்?
  • ருசி கண்ட பூனைகள், அதிகாரத்தில், ஆட்டம் போட்டவர்கள்.

இதனால் நடந்தது என்ன?

  • அனைத்துமே தலைகீழ் ஆனது.
  • வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டன.
  • பஞ்சாலைகள் மூடி விட்டனர்.
  • பாரம்பரிய தொழில்கள் நாசம் அடைந்து விட்டன.
  • தொழில் வளர்ச்சி எதுவும் இல்லை.
  • விவசாய நிலங்கள் காலிமனைகளாகி விட்டன.
  • கூட்டுறவு, அரசு சார்பு நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், இவர்களின் வேலை வாய்ப்பு நிலையங்களாக மாறி விட்டன.
  • விளைவு, அதிக ஆட்கள் நியமனம். இன்று சம்பளம் தரமுடியாத நிலை.
  • கோவில் நிர்வாகத்திலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் தலையீடு.
  • அதிகாரத்தை குவித்து வைத்து ஆட்டம் போட, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், காலம் கடத்துதல்.
  • இவ்வளவையும் கண்டுகொள்ளாமல், தேவைப்படும் போது போராட்டம் நடத்துவதும். அறிக்கை விடுவதுடன் எதிர்கட்சிகள் பணி முடிந்து போய் விடுகிறது.
  • மக்களும் வெறுத்து போய்,  ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று பொறுப்பு இல்லாமல். பணம் வாங்கி கொண்டு ஓட்டுப் போடும் விபரீத நிலைக்கு மக்கள் வந்து விட.

புதுச்சேரி என்ற ஒரு அழகிய மாநிலம். மேலும் நாசமாகி மோசமாகி போவதை. கண்டும் காணாததுமாக எப்படி கடந்து செல்வது?
வீரம், தீரம், விவேகம் மிக்க இளைஞர்களே இனி உனக்கு உறக்கம் எதற்கு? வீறு கொண்டு எழு.

  • கிராமம் தோறும், கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்து.
    தகவல் பெறும் உரிமை சட்ட குழுக்கள் ஆரம்பித்து.
  • ஊழலை வெளிப்படுத்து.
  • மக்களை திரட்டு.
  • புதிய ஆட்சி மாற்றத்தை புதுச்சேரியில் ஏற்படுத்து.
  • அது உன்னால் மட்டுமே முடியும்…
  • எரிமலைக்கு இன்னும் ஏன் உறக்கம்.
  • அழுகிய புதுச்சேரியை, அழகிய புதுச்சேரி யாக மாற்று.
  • புதுச்சேரி மக்களையும், புதுச்சேரி மாநிலத்தையும் , வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல உன்னால் மட்டுமே முடியும். இனியும் ஏன் தயக்கம்?

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »