புதுவைக்கு மாநில தகுதி கோரிக்கை.புதுவைக்கு மாநில தகுதி கோரிக்கை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் உள்ள ஒற்றுமை.

  • புதுச்சேரியை 1954 ல் பிரெஞ்சு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
  • 1956 ல் ஒப்பந்தம் போட்டது. அதன் படி நடக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.
  • 1962 ம் ஆண்டு வரை பிரெஞ்சு அரசு இதை கண்காணித்து விட்டு, பிறகு வெளியேறியது. (பிறகு நடந்தது என்ன?)
  • 1963 ல் யூனியன் பிரதேசங்கள் சட்டம் கொண்டு வந்து, புதுச்சேரியை சேர்த்த போது, அது தனது சிறப்பு நிர்வாக அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து இழந்தது.

தற்போது புதுச்சேரியின் நிலை எல்லோருக்கும் தெரியும்.

புதுச்சேரியில் முழு வரலாறு படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன?

  • 1947 ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகள் பிரிந்தது.
  • அப்போது இந்திய மாநிலங்கள், சுதந்திரமாக இருக்கவே மேற்கண்ட இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சேர விருப்ப உரிமை அளிக்கப்பட்டன.
  • 1947 சட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் காஷ்மீரை தாக்கியது.
  • அம்மாநில மகாராஜா காஷ்மீரை காக்க, இந்தியா உதவியை நாடினார்.
  • 26-10-1947 ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்து, அந்த தேதி யிலேயே இணைப்பு உடன்படிக்கை Instrument of Accession இந்தியாவுடன்  மகாராஜா கையொப்பமிட்டார்.
  • இதற்கு மக்களவை 17-11-1957 ல் இந்தியாவின் ஒரு பகுதியானது.

பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி, புதுச்சேரி இந்தியாவில் எப்படி இணைக்கப்பட்டதோ,  அதே போன்று ஜம்மு காஷ்மீரும் உடன்படிக்கை யோடு இணைந்தது. புதுச்சேரி 1963 ல் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது போல், ஜம்மு காஷ்மீரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர், லடாக், என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய உள்துறை அதிக நிதி ஒதுக்கீடு செய்து தருகிறது. ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசத்துக்கு 2021 ம் ஆண்டு ரூ 30257 கோடியும். 2022 ம் ஆண்டு 30257 கோடியும்..
லடாக் யூனியன் பிரதேச த்துக்கு, 2021 ம் ஆண்டு ரூ 5958 கோடியும் 2022 ம் ஆண்டு 5958 கோடியும் வாரி வழங்கி உள்ளது. இத்தனைக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் சுமார் நான்கு லட்சம் மக்கள் தான் வாழ்கின்றனர்.

தற்போது லடாக், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி, மக்கள் அமைப்புகளை ஒன்று திரட்டி, போராட்ட குழு அமைத்து போராடி வருகின்றனர்.

யூனியன் பிரதேசம் மூலம் மத்திய அரசு அடிமை மாநிலமாக்கி, தங்களின் கலாச்சாரம், பண்பாடு, நிலம், வாழ்வாதாரம்,  இழக்க செய்துவிடும். இந்த இரண்டு யூனியன் பிரதேச மக்கள் அமைப்புகளின் போராட்டக் குழுவின் முக்கிய கோரிக்கை யாக இருக்கிறது.

இவ்வளவு நிதி கொடுத்தும், அவர்கள் உரிமையை இழக்க தயாரில்லை. ஒன்று கூடி போராடி வருகின்றனர்.

ஆனால் புதுச்சேரியில் என்ன நடக்கிறது?

  • 58 ஆண்டு கால போராட்டம்.
  • 13 தடவைக்கு மேல் சட்டமன்றத் தீர்மானம்.
  • மத்திய அரசின் நிதி 100 சதவீதத்தில் இருந்து 17.42 சதவீதமாகி விட்டது.
  • பண்பாடு, கலாச்சாரம், நிலம், வாழ்வாதாரம் பாரம்பரிய தொழில்கள்,  வேலைவாய்ப்பு, ஆகியவை முற்றிலும் அழிந்து போய் விட்டன.

இன்னும், இறுதி போராட்டம்  நிலைக்கு வரவே இல்லை. மயக்கம், தயக்கம், மக்கள் மத்தியிலும் இல்லை, தலைவர்கள் மத்தியிலும் இல்லை

உரிமை இழந்தோம். உடமை இழந்தோம். உணர்வை இழக்கலாமா.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »