தணிக்கை அறிக்கை என்பது வரவு செலவு அறிக்கை. இதில் சுட்டிக் காட்டப்படும். அதிலுள்ள  குறைபாடுகள், முறைகேடுகள், முதலில் களையப்பட வேண்டும். உடனடியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இதனை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு, தலைமை செயலருக்கு தான் இருக்கிறது.

ஆனால் அசையாத பொம்மை போல் எந்த வித நடவடிக்கை எடுக்காமல், கடற்கரை காற்று வாங்கி செல்வதால் வந்த விணை தான், தற்போதைய அவல நிலைக்கு காரணம்.

நாம் ஆட்சியாளர்களை குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத். திறன் அவ்வளவாக தெரியாது. நிர்வாகத்தை சரியாக நடத்துபவர்கள், துறைத் தலைவர்கள், துறைச் செயலர்கள், தலைமைச் செயலர், ஆகியோர் தான்.

எதிர்க்கட்சிகளும் சரி, சமூக அமைப்புகளும் சரி, ஆளும் அரசை விமர்சிப்பதிலேயே நோக்கம் முழுமையாக இருப்பதால், இந்த அதிகார வர்க்கம் தப்பித்து கொள்கின்றது.

இவர்களது சொத்து கணக்குகள், அபரிவிதமான நிலைக்கு செல்கின்றன. ஆட்சியாளர்களின் ஆசியும் பாதுகாப்பும் இவர்களுக்கு முழுமையாக இருப்பதால், சுக போக சொர்க்க வாழ்க்கை நடத்துகின்றனர்.

எனவே நமது கண்காணிப்பு எல்லாம், இந்த அதிகாரிகள் மீது முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.

தணிக்கை அறிக்கை குறைபாடுகளை, தவறுகளை, முறைகேடுகளை, களையாமலும் நடவடிக்கை எடுக்காமலும் காலம் கடத்துவதால், இவர்கள் மூலம் ஆட்சியாளர்கள் லாபம் அடைகின்றனர்.

ஆனால், மத்திய உள்துறை தணிக்கை அறிக்கை குறைபாடுகளை, முறைகேடுகளை, நிலுவைத் தொகைகளை, வசூல் செய்யாமல், ஒருபக்கம் புதுச்சேரி வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதாக புள்ளி விவரங்கள் காட்டுவதும், மறுபக்கம், வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகம் உள்ளதாக கணக்கு காட்டி கஜானாவை காலி செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

தணிக்கை அறிக்கை குறைபாடுகள், முறைகேடுகள்,  நிலுவைத் தொகை, ஆகியவற்றை, 2019-2020 தணிக்கை அறிக்கையை வைத்து, உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

சமூக ஆர்வலர்களே, சமூக அமைப்புகளே, தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களே. உங்களுக்காக இந்த விரிவான பதிவு.

2019-2020 தணிக்கை குறைபாடுகள், முறைகேடுகள், நிலுவைத்தொகை, நிர்வாகத்திறமையின்மை ஆகியவை பற்றி விரிவான பதிவு இது .

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »