புதுச்சேரி உண்மை நிலையை புதுச்சேரி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

  • நிதிப்பற்றாக்குறை உண்மையிலேயே இருக்கிறதா?
  • திட்டம் இட்ட சதியா?
  • ஆட்சியாளர்களின் கையாலாகாத நிலை ஒரு காரணமா?
  • வட இந்திய அதிகாரிகளின் வேட்டைக்காடாக மாறிவிட்டதா?
  • அண்டை மாநிலத்தவரின் ஊடுருவல் ஒரு காரணமா?
  • ஆட்சி அதிகாரத்தை பரவலாக்க விரும்பாமல், குட்டி ராஜ்யத்தை நடத்த ஆட்சியாளர்களின் திட்டம் இட்ட சதியா?
  • சட்டத்தை மதித்து இந்த ஆட்சி நடக்கிறதா?
  • அரசாணைகளை உயர் அதிகாரிகள் மதித்து நடக்கின்றனரா?
  • உயர் அதிகாரிகள் தங்கள் பணியில் மெத்தனம் காட்டுவது ஏன்?
  • ஆளும் அரசும், எதிர்க்கட்சிகளும், கூட்டு சேர்ந்து விட்டார்களா?
  • இந்த நிலை இப்படியே தொடருமா?
  • இவர்கள் உரிமை குரலை உரக்க எழுப்ப மாட்டார்களா?
  • புதுச்சேரி மக்கள் வாழ்வாதாரம் இழந்து, இந்த அரசியல் வியாபாரிகளிடம் கையேந்தி தான் நிற்க வேண்டும்?

நாளொரு அறிக்கை, பொழுதொரு போராட்டம், என்ற வேடிக்கை விநோதங்களை எத்தனை நாள் சகித்துக் கொண்டு இருப்பது?

தனிநபர் துதிபாடுகள், அல்லக்கை அளப்பறை அளவுக்கு மீறி போகின்றன. உரிமைகளுக்கு உரக்க குரல் கொடுப்பவர்கள் கூட, இவர்களின் ஆதரவு அரவணைப்பில் உள்ளவர்கள் மிரட்டும் அவலம். இவர்களுக்காக இவர்களை விளம்பரம் செய்து கொள்ளும் விநோதம்.

ருசி கண்ட பூனைகள், ஒவ்வொன்றையும் ரூம் போட்டு யோசிக்கின்றன. பணம், காசு, துட்டு.  நல்ல வாயன்கள் போய் இப்போது நாரவாயன்களிடம் மாட்டிக் கொண்டது. பல திட்டங்கள் பாதியிலேயே நிற்க்கின்றன.

  • காமராஜர் மணி மண்டபம் தொடங்கி.
  • கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம்.
  • சிறப்பு பொருளாதார மண்டலம்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டம் அனைத்து திட்டங்களுமே அதல பாதாளத்தில் உள்ளன.

2004 ல் உருவான 2010 ல் வெளியான புதுச்சேரி வளர்ச்சி அறிக்கை புதைகுழிக்கு சென்ற கதை தெரியுமா?

சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், இப்போது ஐடி களின் குடித்து கூத்தடிக்கும் குப்பை மேடாகி போனதே, இந்த வருமானம் உண்மையிலேயே அரசுக்கு தான் வருகிறதா?

கோயில், குளம், சினிமா, கடற்கரை, ஆசிரமம், என சுற்றி வந்த புதுச்சேரி மக்களுக்கு,
பூரண சுதந்திரம் இப்போது கிடைக்க வில்லை.

கடந்த பட்ஜெட்டில், மத்திய உள்துறை நமக்கு ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

  • புதுச்சேரிக்கு ரூ 1730 கோடி மட்டும்,
  • ஜம்மு காஷ்மீருக்கு ரூ 30357 கோடி,
  • லடாக்கிற்கு ரூ 5958 கோடி,
  • அந்தமானுக்கு ரூ 5117 கோடி.

மாண்புமிக சட்டமன்ற உறுப்பினர்கள்,  சாலைகளை போட பூமி பூஜை போட்டி நடக்கிறது.  இந்த நிலையில், இன்னும் இரண்டு மாதத்தில் பட்ஜெட் தயாரிப்பு.

அரசு இயந்திரம் முழுவதும் அப்படியே நின்று விடும். கேட்டால் பட்ஜெட் தயாரிப்பு வேலை. இப்போது புதுச்சேரிக்கு பட்ஜெட்டில் என்ன தேவை. பாமரனுக்கும் உண்மை தெரியட்டுமே.

ஓட்டு போட்ட மக்கள் தான் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

இனி ஓட்டு போடபோகும் மக்கள் அதைவிட தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »