மத்திய உள்துறை அமைச்சகம், 8 யூனியன் பிரதேசங்களுக்கும் வருடா வருடம் நிதி  ஒதுக்கீடு விவரம்.

இதை நாம் மட்டும் அல்ல, நம்மூர் அரசியல் வாதிகளும் அறிந்து கொள்ளட்டும்.

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம்,யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம்.

எண். யூனியன் பிரதேசம். 2019,2020. 2020,2021. 2021,2022.
1. ஜம்மு காஷ்மீர். 1129 கோடி. 30257 கோடி. 30757 கோடி.
2. லடாக். 11729 கோடி. 5958 கோடி. 5958 கோடி.
3. சண்டிகார். 4144 கோடி. 4515 கோடி. 4661 கோடி.
4. அந்தமான் தீவுகள். 4949 கோடி. 4825 கோடி. 5317 கோடி.
5. புதுச்சேரி. 1601 கோடி. 1703 கோடி. 1730 கோடி.
6. லட்சத்தீவு. 1297 கோடி. 1350 கோடி. 1441 கோடி.
7. டையு டாமன் தீவுகள். 2115 கோடி. 1419 கோடி. 2204 கோடி.
8. டெல்லி. 1022 கோடி. 1116 கோடி. 958 கோடி.
9. மொத்தம். 26851 கோடி. 51282 கோடி. 53026 கோடி.

குறிப்பு: 2019,2020  ஆண்டிற்கான நிதி, 11729 கோடி. ஒதுக்கும்போது, லடாக், யூனியன் பிரதேசமாக இல்லை.

இது தான் மத்திய உள்துறையின் மூலம் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

  1. டெல்லி.
  2. ஜம்மு காஷ்மீர்.
  3. புதுச்சேரி

ஆகிய மூன்றும், சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசங்கள்.

டெல்லியை பொறுத்தவரை,  அதிக வரி வருவாய் ஈட்டும் யூனியன் பிரதேசம். மேலும், தலைநகர அந்தஸ்து உடையது. காவல் துறை க்கான நிதி ஒதுக்கீடு தனியாக ஒதுக்கப்படுகிறது.

ஆனால், புதுச்சேரியை பொறுத்தவரை, வரி வருமானம் போதிய அளவில் இல்லை.

நமக்கு மத்திய உள்துறை அளித்திருக்கும் நிதியினை பார்க்கவும்.

100 சதவீத நிர்வாக செலவுகளை புதுச்சேரிக்கு கொடுக்கவேண்டுமென்று, பிரன்ச் இந்திய ஒப்பந்தந்த்தில் மத்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட பிறகும், நம்மை ஏமாற்றி வஞ்சிப்பது ஏன்?

பிரன்ச் இந்திய ஒப்பந்தத்தை படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

பிரான்ஸ் அரசு பாண்டிச்சேரியை ஒப்படைத்தது முதல் இந்திய அரசால் ஏமாற்றப்பட்டது வரை.

 

இதனை அதிகம் பகிரவும்.

நமது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும். அரசியல் தலைவர்களுக்கும் தெரிவிக்கவும்.

இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பதிவு.

முதல்வர் அவர்களே, அமைச்சர்களே , சட்ட மன்ற உறுப்பினர்களே, பாராளுமன்ற, ராஜ்ய சபா உறுப்பினரே.

புதுச்சேரி மக்களின் இறுதி வேண்டுகோள்.

மத்திய உள்துறையின், கீழ் காவல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போன்றவை யூனியன் பிரதேசங்களில்  இயங்குகின்றன.

இதற்கு அமைச்சராக திரு அமித்ஷா அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்.

அந்தமானுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகை புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையை விட மூன்று மடங்கு அதிகம்.

ஆனால் 2021 ன் படி அந்தமான் மக்கள் தொகை நான்கு லட்சம் மட்டுமே.  மேலும், அங்கு சட்டமன்றம் இல்லை. மத்திய உள்துறை யின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

அதேசமயம், புதுச்சேரியின் மக்கள் தொகை 2021 ன் படி 8.5 லட்சத்தை தாண்டிவிட்டது. புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றத்தை வைத்துக்கொண்டு  குறைவாக நிதி பெறுவது வெட்க கேடானது.

2022,2023 ம் ஆண்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு கேட்டு பெற வேண்டும். இல்லையேல்?

எங்களுக்கு இந்த அதிகாரம் இல்லாத சட்டசபை தேவையில்லை. என்ற முடிவுக்கு வரவேண்டி வரும்.

இனி வரப்போகும் 2022, 2023 பட்ஜெட்டிலாவது, மத்திய அரசிடம் , அதிக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, கோரிக்கை வைக்க வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாக ஆம் ஆத்மி கட்சி கேட்டுகொள்கிறது.

உரிமை இழந்தோம்.
உடமை இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா?

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »