புதுச்சேரியின்  தேர்தல் வரலாற்று செய்திகள்.

முதல் கோணல், முற்றும் கோணல். புதுச்சேரியில் நடந்த முதல் தேர்தலிலேயே, கோஷ்டி மோதல், கட்சி தாவுதல், ஆட்சி கலைப்பு என்பது நடந்துள்ளது.

புதுச்சேரி இந்திய அரசுடன் இணைந்த பிறகு, புதுச்சேரியில் முதன் முதலாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது.

  1. 1954 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.
  • புதுச்சேரியில்,22 தொகுதிகளும்.
  • காரைக்காலில், 12 தொகுதிகளும்.
  • மாஹே யில், 3 தொகுதிகளும்.
  • ஏனாமில், 2 தொகுதிகளும்.

மொத்தம் 39 தொகுதிகள் இருந்தன.

சட்டமன்றத் தேர்தல் முடிவில்.

  • 20 காங்கிரஸ்.
  • 16 மக்கள் முன்னணி, கம்யூனிஸ்டுகள் தலைமையில்.
  • 3 சுயேச்சைகள்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • அண்ணுசாமி.
  • சண்முகம்.
  • சுப்பையா.
  • வெங்கடசுப்பா ரெட்டியார்.
  • குபேர்.
  • கவி வெ நாரா.
  • பக்கிரிசாமி ஆகியோர்.
  1. இந்த தேர்தலில், சுயேச்சைகள் மூன்று பேர் ஆதரவுடன்காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
  2. முதன் முதலாக மக்கள் முண்ணனியில் இருந்து மூன்று நபர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.
  3. 1955 முதல் 1956 வரை திரு பக்கிரிசாமி பிள்ளை முதல்வராக இருந்தார். பின்,அவர் இறந்து விட்டதால்.
  4. பின்னர் குபேர் தலைமையிலான ஆட்சி பதவியேற்றது. இருப்பினும் 1958 வரையே நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி கோஷ்டி மோதலால் ஆட்சி கலைக்கப்பட்டு,  9 மாத காலம் தலைமை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  5. பிறகு 1959 ம் ஆண்டு அடுத்த தேர்தல் நடந்தது.

ஆரம்ப கால வரலாறே இப்படித்தான் ஆரம்பித்தது.

2. 1959 சட்ட சபை தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 21 காங்கிரஸ்.
  • 13 மக்கள் முண்ணனி.
  • 5 இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றினர்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • குபேர்.
  • வெங்கடசுப்பா ரெட்டியார்.
  • சுப்பையா.
  • சுப்ரமணிய படையாச்சி.
  • சரஸ்வதி சுப்பையா.
  • சண்முகம்.
  • குருசாமி.
  • கவி வெ நாரா.
  • கருவடிகுப்பம் நாராயணசாமி ஆகியோர்.

வாக்குகள் விபரம்.

மொத்த வாக்காளர்கள் 157303.

காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 60632.

மக்கள் முண்ணனி வாக்குகள் 49505.

சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் 47166.

  1. 1959 முதல் 1963 வரை திரு வெங்கடசுப்பா ரெட்டியார்.
  2. 1963 ல் இந்திய அரசு புதுச்சேரி அரசை யூனியன் பிரதேச சட்டத்தை திருத்தியது. ஆனால், பிரன்ச் இந்திய ஒப்பந்தப்படி, புதுச்சேரி மக்களின் கருத்தை கேட்கவில்லை.
  3. இதற்கு மக்கள் முண்ணனி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் சட்டம் நிறைவேறியது.
  4. 1963 முதல் 1964 வரை குபேர் தலைமையில் ஆன அமைச்சரவை பதவியேற்றது.
  5. 1963 யூனியன் பிரதேச சட்டத் திருத்தத்தில் புதுச்சேரியை சேர்த்ததில், 39 சட்டமன்ற தொகுதிகள் 30 ஆக குறைக்க பட்டது.
  6. சிறப்பு நிர்வாக அந்தஸ்து இழந்தது.
  7. 100 சதவீத மான்யம் 90 சதவீத மான்யம் ஆனது.

பாண்டிச்சேரி, அப்போதுதான் தன் உரிமையை இழக்க ஆரம்பித்தது.

3. 1964 சட்ட சபை தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 20 இடங்கள்  காங்கிரஸ்,
  • 1  இடம் இந்திய தேசிய காங்கிரஸ்,
  • 4 இடங்கள்  மக்கள் முன்னணி,
  • 5  இடங்கள்  சுயேச்சைகள்  கைப்பற்றினர்.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள் 215872.
  • ஓட்டு போட்டவர்கள் 171147.
  • செல்லாதவை 3396 ஓட்டுக்கள்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • வ சுப்பையா.
  • வெங்கடசுப்பா ரெட்டியார்.
  • பாரூக் மரைக்காயர்.
  • பி, சண்முகம்.

4. 1969 சட்ட சபை தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 3  இடங்கள் கம்யூனிஸ்டுகள்,
  • 10 இடங்கள் காங்கிரஸ்,
  • 15 இடங்கள் தி,மு,க,
  • 2 இடங்களை சுயேச்சைகள்  கைப்பற்றினர்.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள், 228754.
  • ஓட்டு போட்டவர்கள், 186631.
  • செல்லாதவை, 3497.

இந்த தேர்தலில், கடந்த தேர்தலில் சுயேச்சையாக நின்று மூன்று பேர் கட்சி மாறினர்.

  • 1. பெருமாள் ராஜா,
  • 2. அஷ்ரப்,
  • 3. சுப்ரமணிய படையாச்சி.

முக்கியமானவர்கள் விபரம்.

  • சுப்பையா,
  • அன்சாரி துரைசாமி,
  • தெ, ராமச்சந்திரன்,
  • ராமசாமி,
  • சண்முகம் ஆகியோர்.

5. 1974 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 2 கம்யூனிஸ்டுகள்,
  • 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
  • 7 காங்கிரஸ்,
  • 5 தேசிய காங்கிரஸ்,
  • 12 அ,தி,மு,க,
  • 2 தி,மு,க,
  • 1 சுயேச்சை.

அ,தி,மு,க, அப்போது தான் புதிதாக போட்டியிட்டது.

வாக்குகள் விபரம்.

மொத்த வாக்காளர்கள் 264103.

ஓட்டு போட்டவர்கள் 225328.

செல்லாதவை 6830.

முக்கியமானவர்கள் விபரம்.

  • பெத்த பெருமாள் (புதிய வரவு),
  • அன்சாரி துரைசாமி,
  • தெ, ராமச்சந்திரன்,
  • எஸ், ராமசாமி,
  • சுப்பையா ஆகியோர்.

1964 முதல் 1974 வரை ஆண்ட முதல்வர்கள்.

  • எட்வர்ட் குபேர், 1963 முதல் 1964 வரை.
  • வெங்கடசுப்பா ரெட்டியார், 1964 முதல் 1967 வரை.
  • எம், ஓ, எச், பாருக் மரைக்காயர், 1967 முதல் 1968 வரை.
  • வெங்கடசுப்பா ரெட்டியார், 1968 முதல் 1969 வரை.
  • எம், ஓ, எச், பாருக் மரைக்காயர், 1969 முதல் 1974 வரை. இது வரை காங்கிரஸ் ஆட்சி.
  • தி, மு, க, ஆட்சி 1974 தேர்தலில், 22 நாட்கள் மட்டுமே சட்டசபை நடந்தது. பின்னர் கலைக்கப்பட்டது.
  • 1969 முதல் 1974 வரை, 242 நாட்களும்,
  • 1974 முதல் 1977 வரை, 3 ஆண்டுகள் 96 நாட்கள் குடியரசு தலைவர் ஆட்சி நடந்தது.

6. 1977 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 1 கம்யூனிஸ்டுகள்,
  • 2 காங்கிரஸ்,
  • 7 ஜனதா,
  • 14 அ,தி,மு,க,
  • 3 தி,மு,க,
  • 3 சுயேச்சைகள் வென்றனர்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • அன்சாரி துரைசாமி,
  • சுப்பையா,
  • தெ, ராமச்சந்திரன்,
  • உத்திர வேல்.,
  • எஸ், ராமசாமி ஆகியோர்.

வாக்குகள் விபரம்.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 307208.

ஓட்டு போட்டவர்கள் 228105.

செல்லாதவை 2407.

7. 1980 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 1 மார்க்சிஸ்ட்,
  • 10 காங்கிரஸ்,
  • 3 ஜனதா,
  • 14 தி,மு,க,
  • 2 சுயேச்சைகள் பெற்றன.

இதில், அன்சாரி துரைசாமி, சுப்பையா ஆகிய இருவரும் தோற்றனர்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • எம், ஏ, சண்முகம்.
  • தெ, ராமச்சந்திரன்.
  • உத்திர வேல்.
  • பெத்த பெருமாள்.
  • ரேணுகா அப்பாதுரை.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள் 319137.
  • ஓட்டுப் போட்டவர்கள் 256603.
  • செல்லாதவை  11608.

8. 1985 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 15 காங்கிரஸ்.
  • 2 ஜனதா.
  • 6 அ,தி,மு,க.
  • 5 தி,மு,க.
  • 2 சுயேச்சைகள் இடம் பிடித்தன.

முக்கியமானவர்கள் விபரம்.

  • ப, கண்ணன்.
  • எம், ஏ, சுப்ரமணியம்.
  • வி, வைத்திலிங்கம்.
  • தெ, ராமச்சந்திரன்.
  • ஜானகிராமன்.
  • பாரூக் மரைக்காயர்.
  • பாலாஜி.
  • வி, கோவிந்த ராஜன் ஆகியோர்.

பாரூக் அஷ்ரப் ஆகியோர் தி,மு,க,வில் இருந்து காங்கிரஸ்க்கு மாறினர்.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள் 388472.
  • ஓட்டு போட்டவர்கள் 304532.
  • செல்லாதவை 2808.

1977-1990 வரை ஆட்சி செய்த கட்சிகள் விபரம்.

  • 1977 முதல் 1978 வரை, எஸ், ராமசாமி, அ,தி,மு,க. ஆட்சி.
  • 1978 முதல் 1980 வரை, குடியரசு தலைவர் ஆட்சி.
  • 1980 முதல் 1983 வரை, தெ, ராமச்சந்திரன் தி,மு,க, ஆட்சி. அப்போது, அ,தி,மு,க,வில் இருந்து மீண்டும் தி,மு,க,வுக்கு வந்து இந்த பதவியை பெற்றார்.
  • 1983 முதல் 1985 வரை, குடியரசு தலைவர் ஆட்சி.
  • 1985 முதல் 1990 வரை, பாரூக்  காங்கிரஸ்ஆட்சி. அப்போது, தி,மு,க,வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்து இந்த பதவியை பெற்றார்.

9. 1990 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 2 கம்யூனிஸ்டுகள்,
  • 11 காங்கிரஸ்,
  • 4 ஜனதா தளம்,
  • 3 அ,தி,மு,க,
  • 9 தி,மு,க, கைப்பற்றினர்.

வாக்குகள் விபரம்.

  • பதிவான வாக்குகள் 585194.
  • ஓட்டு போட்டவர்கள் 423587.
  1. பத்து வருடங்களுக்கு பிறகு கம்யூனிஸ்டுகள் சட்டசபைக்குள் நுழைந்தனர்.
  2. பெத்த பெருமாளிடம் திரு, ரங்கசாமி அவர்கள் தோற்று போனார்.
  3. தோழர் சங்கரன் அவர்களும் இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • எஸ் பி சிவக்குமார்.
  • ஜானகிராமன்.
  • தெ ராமச்சந்திரன்.
  • விஸ்வநாதன்.
  • மஞ்சினி.
  • எம் ஓ எச் பாரூக்.
  • பெத்த பெருமாள்.
  • ராமசாமி.
  • கமலக்கண்ணன்.
  • வல்சராஜ் ஆகியோர்.

10.1991 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 1 கம்யூனிஸ்டுகள்.
  • 15 காங்கிரஸ்.
  • 1 ஜனதா.
  • 6 அ,தி,மு,க.
  • 4 தி,மு,க.
  • 3 சுயேச்சைகள் பெற்றனர்.
  1. தற்போதைய முதல்வர் முதன் முதலாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
  2. காங்கிரஸ் தலைவர் ப, சண்முகம் தோல்வியடைந்தார்.
  3. பெருமாள் ராஜா தோல்வியடைந்தார்.
  4. மல்லாடி சுயேச்சை யாக நின்று 6 வாக்குகள் வாங்கினார்.
  5. சங்கரன் மீண்டும் தேர்தலில் தோற்றார்.
  6. தெ, ராமச்சந்திரன் அ,தி,மு,க,வுக்கு சென்று, ஜானகிராமனை எதிர்த்து நின்று தோற்றார்.

முக்கிய மானவர்கள் விபரம்.

  • மா, இளங்கோ,
  • ஜானகிராமன்,
  • வைத்தியலிங்கம்,
  • ந, ரங்கசாமி,
  • விஸ்வநாதன்,
  • ப, கண்ணன்,
  • நாஜீம்.

11. 1996 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 2 கம்யூனிஸ்டுகள்.
  • 9 காங்கிரஸ்.
  • 1 ஜனதா.
  • 3 அ,தி,மு,க.
  • 7 தி,மு,க.
  • 5 தமிழ் மாநில காங்கிரஸ்.
  • 2 சுயேச்சைகள் இடம் பெற்றனர்.
  1. அதிக வாக்குகள் வித்தியாசத்தில், கம்யூனிஸ்ட் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். வாக்குகள் வித்தியாசம் 11240.
  2. இந்த தேர்தலில் முதன்முறையாக நின்ற, ஷாஜகான் தோற்றார்.

முக்கியமானவர்கள் விபரம்.

  • சிவா.
  • ஜானகிராமன்.
  • மஞ்சினி.
  • விஸ்வநாதன்.
  • வைத்தியலிங்கம்.
  • சி ஜெயக்குமார்.
  • ரங்கசாமி.
  • நாஜீம்.
  • வி, எம், சி, சிவக்குமார்.
  • கமலக்கண்ணன்.
  • வல்சராஜ்.
  • மல்லாடி.
  • எஸ்,பி, சிவக்குமார்.
  • ம, கந்தசாமி, ஆகியோர்.
  1. 1990 முதல் 1991 வரை, தெ, ராமச்சந்திரன். தி,மு,க, ஆட்சி.
  2. 1991 முதல் 1991 இறுதிவரை, குடியரசு தலைவர் ஆட்சி.
  3. 1991 முதல் 1996 வரை, வைத்தியலிங்கம் காங்கிரஸ் ஆட்சி.
  4. 1996 முதல் 2000 வரை, ஜானகிராமன். தி,மு,க, ஆட்சி.
  5. 2000 முதல் 2001 வரை ப, சண்முகம். காங்கிரஸ் ஆட்சி.
  6. ஏனாம் எம், எல், ஏ, ராஜினாமா செய்து, ப, சண்முகம் அவர்களை இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது.

12. 2001 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 3 அதிமுக.
  • 7 திமுக.
  • 1 பிஜேபி.
  • 11 காங்கிரஸ்.
  • 2 தமிழ் மாநில காங்கிரஸ்.
  • 4 புதுச்சேரி மாநில காங்கிரஸ்.
  • 2 சுயேச்சைகள்.

வாக்குகள் விபரம்.

மொத்த வாக்காளர்கள் 658647,

வாக்களித்தவர்கள் 461735,

முக்கியமானவர்கள் விபரம்.

  1. லட்சுமி நாராயணன்,
  2. எஸ் பி சிவக்குமார்,
  3. ஜானகி ராமன்,
  4. வைத்திலிங்கம்,
  5. ராதாகிருஷ்ணன்,
  6. ஜெய மூர்த்தி,
  7. தெ ராமச்சந்திரன்,
  8. ஜெயக்குமார்,
  9. நமச்சிவாயம்,
  10. ரங்கசாமி,
  11. நாஜீம்,
  12. கமலக்கண்ணன்,
  13. மல்லாடி ஆகியோர்.

இதில், காங்கிரஸில்  இருந்து பிரிந்தவை.

  • புதுச்சேரி மாநில காங்கிரஸ்.
  • தமிழ் மாநில காங்கிரஸ். இவ்விரண்டு கட்சிகளும்.

13. 2006 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  1. கம்யூனிஸ்டு ஒரு இடமும்,
  2. காங்கிரஸ் 10 இடமும்,
  3. அதிமுக 3 இடங்களும்,
  4. திமுக 7 இடங்களும்,
  5. மதிமுக ஒரு இடமும்,
  6. பாமக இரண்டு இடங்களும்,
  7. சுயேச்சைகள் மூன்று இடங்களும் பெற்றன.

வாக்குகள் விபரம்.

மொத்த வாக்காளர்கள் 659420,

வாக்களித்தவர்கள் 567071.

முக்கியமானவர்கள் விபரம்.

  • எஸ் பி சிவக்குமார்.
  • லட்சுமி நாராயணன்.
  • சிவா.
  • எம் ஏ எஸ் வைத்திலிங்கம்.
  • கந்தசாமி.
  • நமச்சிவாயம்.
  • ரங்கசாமி.
  • விஸ்வநாதன்.
  • ஷாஜகான்.
  • நாஜீம்.
  • வல்சராஜ்.
  • மல்லாடி ஆகியோர்.

14. 2011 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  1. அதிமுக 5 இடங்களும்,
  2. என் ஆர் காங்கிரஸ் 15 இடங்களும்,
  3. திமுக இரண்டு இடங்களும்,
  4. சுயேச்சைகள் ஒரு இடமும்,
  5. காங்கிரஸ் 7 இடங்களும் வெற்றி பெற்றன.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள் 810635,.
  • வாக்களித்தவர்கள் 693270.

முக்கியமானவர்கள் விபரம்.

  • ஜெயக்குமார்.
  • ரங்கசாமி.
  • வைத்திலிங்கம்.
  • கல்யாணசுந்தரம்.
  • லட்சுமி நாராயணன்.
  • நேரு.
  • நாஜீம்.
  • வி எம் சி சிவக்குமார்.
  • மல்லாடி.
  • வல்சராஜ்  ஆகியோர்.
  1. 2001 முதல் 2006 வரை திரு ரங்கசாமி முதல்வரானார்.
  2. 2006 முதல் 2008 வரைமீண்டும் திரு ரங்கசாமி அவர்களே முதல்வர் ஆனார்.
  3. 2008 முதல் 2011 வரை வைத்திலிங்கம் அவர்கள் முதல்வர் ஆனார்.
  4. 2011 முதல் 2016 வரை திரு ரங்கசாமி அவர்களே முதல்வர் ஆனார்.

 

15. 2016 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்.

  • 4 அ தி மு க.
  • 8 என் ஆர் காங்கிரஸ்.
  • 2 தி மு க .
  • 1 சுயேச்சை.
  • 15 காங்கிரஸ்.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள் 941935.
  • வாக்களித்த வர்கள் 791477.

முக்கியமானவர்கள் விபரம்.

  • நமச்சிவாயம்.
  • ரங்கசாமி.
  • வைத்தியலிங்கம்.
  • ஷாஜகான்.
  • லட்சுமி நாராயணன்.
  • சிவா.
  • கமலக்கண்ணன்.
  • மல்லா டி.
  • நாராயணசாமி.
  • ஜான் குமார் ஆகியோர்.

குறிப்பாக, இந்த தேர்தலில் பணம் அதிகம் விளையாடியது.

அரசியல் வியாபாரிகள் நிறைய பேர் வெற்றி பெற்றனர்.

16. 2021 சட்ட சபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி விபரம்

  • 6 பி ஜே பி.
  • 6 தி மு க.
  • 6 சுயேச்சைகள்.
  • 2 காங்கிரஸ்.
  • 10 என் ஆர் காங்கிரஸ்.

வாக்குகள் விபரம்.

  • மொத்த வாக்காளர்கள் 1004507.
  • வாக்களித்தவர்கள் 820305

முக்கியமானவர்கள் விபரம்.

  • நமச்சிவாயம்.
  • ஜெயக்குமார்.
  • சிவா.
  • ரங்கசாமி.
  • லட்சுமி நாராயணன்.
  • நாஜீம் ஆகியோர்.
  1. 2016 முதல் 2021 பிப்ரவரி வரை நாராயணசாமி காங்கிரஸ் ஆட்சி.
  2. பிப்ரவரி 21 முதல் மே 21 வரை, குடியரசு தலைவர் ஆட்சி.
  3. மே 21 முதல் தற்போது வரை திரு ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது..

இதுதான் நம் புதுவை மாநிலத்தின் முழு சட்டமன்றத் தேர்தல் வரலாறு. இதில் சாதனைகளும் வேதனைகளும் நிறைந்துள்ளது. இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • 1990 க்கு முன்.
  • 1990 க்கு பின்.
  • 1990 க்கு முன்புள்ள அரசியல், புதுச்சேரி மக்களுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும்  இருந்தது.
  • 1990 க்கு பின்னுள்ள அரசியல், தொகுதி மக்களை பற்றியே இருந்தது.
  • போட்ட முதலை எடுப்பதிலும் அதிக கவனம் இருந்தது.

புதுவை மக்கள், அதை அவசியம் படித்து அரசியல் தெளிவு பெறுவதும், விழிப்புணர்வு அடைவதும், மிகவும் அவசியம்..

 

செய்தி தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »