மத்திய அரசு பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை மீறுவது ஏன்? நியாயம் கேட்க சர்வதேச நீதிமன்றம் செல்ல வேண்டுமா?
இடைக்கால நிவாரணம் 20000 கோடி ரூபாய் தேவை.
- நாம் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டதற்கு, தணிக்கணக்கு ஆரம்பித்தது ஒரு காரணமா?
- இது பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகாதா?
- மக்களின் கருத்தை அப்போது மத்திய அரசு ஏன் கேட்க வில்லை?
இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
தணிக்கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்னும் பின்னும் புதுச்சேரி வரி வருவாய், மற்றும் மத்திய அரசு மானியம் உதவி ஆகியவற்றை பார்க்கலாம்.
கணக்கு. | வருடம். | வரி வரவு. | வரியில்லா. | மானியம். | சதவீதம். |
---|---|---|---|---|---|
முன். | 2000-2001. | 292 கோடி. | 16 கோடி. | 400 கோடி. | 129.87%. |
முன். | 2001-2002. | 269 கோடி. | 21 கோடி. | 502 கோடி. | 173.10% |
முன். | 2002-2003. | 276 கோடி. | 24 கோடி. | 497 கோடி. | 165.66% |
முன். | 2003-2004. | 353 கோடி. | 24 கோடி. | 495 கோடி. | 131.29% |
பின். | 2013-2014. | 1904 கோடி. | 1193 கோடி. | 1211 கோடி. | 39.10% |
பின். | 2014-2015. | 1993 கோடி. | 1300 கோடி. | 1465 கோடி. | 44.48% |
பின். | 2015-2016. | 2260 கோடி. | 1138 கோடி. | 1690 கோடி. | 49.73% |
பின். | 2016-2017. | 2401 கோடி. | 1245 கோடி. | 1537 கோடி. | 42.15% |
ஒவ்வொரு வருடமும், தணிக்கணக்கு ஆரம்பித்ததால் புதுச்சேரிக்கு மானிய இழப்பு, சுமார் 3000 கோடியாகும்.
இதற்காக உங்கள் பார்வைக்கு: தணிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்.
2003-2004 புதுச்சேரி வரவு செலவு அறிக்கை.
வரவு
- வரி வருவாய், 353 கோடி.
- வரி இல்லாத வருவாய், 24 கோடி.
- மத்திய அரசு மான்யம், 495 கோடி.
- ஆக மொத்தம் வரவு, 872 கோடி.
செலவு
- வளர்ச்சிக்கான செலவு, 571 கோடி.
- வளர்ச்சி இல்லாத செலவுகளுக்கு, 294 கோடி.
- மீதி 7 கோடி இருப்பு இருந்தது.
- தணிக் கணக்கு ஆரம்பித்த பின்.
2014-2015 வரவு செலவு அறிக்கையில்.
வரவு
- வரி வருவாய் 1993 கோடி,
- வரி இல்லாத வருவாய்1300 கோடி.
- மத்திய அரசு மான்யம் 1465 கோடி.
- மத்திய அரசு கடன் 604 கோடி.
- ஆக மொத்தம் ரூ 5462 கோடி.
செலவு.
- பொது நிர்வாகம் 1417 கோடி
- சமூக நலம் 1831 கோடி
- நிதி நிர்வாகம் 1552 கோடி
- முதலீடு 614 கோடி
- வட்டி செலுத்த 183 கோடி.
- ஆக மொத்தம் 5598 கோடி.
- பற்றாக்குறை 136 கோடி
- கடன் 614 கோடி.
தணிக்கணக்கு ஆரம்பித்ததின் பலன் இப்போது புரிகிறதா?
நம்மை மத்திய அரசு வஞ்சித்த வரலாறு.
மத்திய அரசே புதுச்சேரியை வஞ்சிக்காதே.
பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை மீறாதே.
தணிக்கணக்கு ஆரம்பித்ததற்கு புதுச்சேரி மக்களிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை.
இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு 3000 கோடி ஏற்படுகிறது.
இடைக்கால நிவாரணமாக 20000 கோடி வழங்குக.
இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றம் சென்று நியாயம் கேட்க நேரிடும்.
என்ற கோரிக்கை, நகரம் எங்கும், கிராமம் எங்கும், உரிமை குரலாக மக்கள் இயக்கமாக, விடுதலை முழக்கமாக, வரவேண்டும்.
- புதுச்சேரிக்கு தணிக்கணக்கு ஆரம்பிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது சரியா?
- புதுச்சேரி மக்களின் கருத்தை அறியாமல் மத்திய அரசு இதை செய்யலாமா?
- இது பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகாதா?
- இதனால் வருடந்தோறும் ஏற்படும் 3000 கோடி இழப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது?
- இதற்கு நியாயம் புதுச்சேரி அரசு ஏன் உரிமை குரலை எழுப்ப அஞ்சுகிறது?
- மக்கள் இயக்கம் இதன் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.
- வழக்கறிஞர் குழுவை கூட்டி ஏன் ஆலோசனை நடத்தவில்லை?.
காலம் கடத்தும் ஒவ்வொரு செயலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
மத்திய உள்துறை அமைச்சர், பாரத பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு தலைவர், .ஆகியோருக்கு முதலில் மனு அளிக்க வேண்டும்.
காலதாமதம் ஏற்படின், சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம்.
முதலில் நாம் மனு அளிக்க வேண்டியது, யாரிடம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவர் இருவர்.
- பிரான்ஸ் சார்பாக, அதாவது நமக்காக, பிரான்ஸ் பிரதமரும் .
- இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர், இந்தியாவுக்காக, இந்திய பிரதமர் நேரு அவர்களும்,
நாம் இப்போது நமக்காக நம்மை பாதுகாக்க சொல்லி ஒப்பந்தம் போட்ட பிரான்ஸ் அதிபரிடம் தான் முறையிட வேண்டும்.
இதற்கான மனுவை முதலில் தயாரிக்க வேண்டும். இதை விவாதத்துக்கு இந்த வலைதளத்தில் உள்ள குழுக்களுக்கு முதலில் பகிரலாம். அனைவரும் இதை பகிரவும்.
செய்தி தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.