புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 10.
இந்த பதிவானது, புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவான வரலாறு பற்றியது. இது முதலில், அரிக்க மேடு வில் ஆரம்பித்தது.
இறுதியில், அகதி மாநிலமாக, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த தற்போது, அவல நிலையில் உள்ளது.
உரிமைகளை உரக்க. பேச ஆட்கள் இல்லை. அனைவருக்குமே மடியில் கணம் உள்ளது.
மத்திய அரசே, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை மீறாதே, என்ற கோஷத்தை எழுப்பினால் போதும். அனைத்து பிரச்னைகளும் தானாக தீர்ந்து விடும். அல்லது, ஒதுங்கி நல்லவர்களுக்கு வழிவிட்டாலாவது நல்லது நடக்கும்.
அல்லது, நல்லவர்களை உடன் வைத்து கொண்டு, ஆலோசனை பெற்று, அதன்படி நடந்தாலாவது நல்லது நடக்கும்.
இப்படி எதுவுமே செய்யாமல், அவ்வப்போது மக்களுக்கு நாக்கில் தேனை தடவினால், அது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல. வளர்ச்சியும் அல்ல.
வீக்கம் பெரிதாக பெரிதாக அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும். அது பேராபத்தில் தான் முடியும்.
நாம் ஒன்றும் கடவுள் அவதாரம் அல்ல.
அண்டிப்பிழைக்கும் சில ஜென்மங்கள், ஏதாவது புகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
தனிநபர் துதிபாடிகள், மாலை மரியாதைகள், நடக்கும், இதற்கு மயங்கி விடக்கூடாது.
அல்லக்கைகளும், அளப்பறைகளும், நிரந்தரமானதல்ல.
மக்கள் நலமும், மக்களின் வாழ்த்துக்களும் மட்டுமே நிரந்தரமானவை.
உங்களை பல நூறாண்டு வாழவைக்கும்.
ஆட்சியாளர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
புதுச்சேரி பெருமக்களே!
உங்களை இப்போது ஒரு கற்பனை உலகுக்கு, அழைத்து செல்ல போகிறேன்.
நான்கு திட்டங்கள் நமக்கு அமல்படுத்த பட்டு இருந்தால், புதுச்சேரி எப்படி இருக்கும். உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
- மாநில தகுதி.
- மத்திய திட்டக் குழுவால் உருவான, புதுச்சேரி முன்னேற்ற அறிக்கை.
- சிறப்பு பொருளாதார மண்டலம்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டம்.
இந்த நான்கு திட்டங்களும், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்பட்டு. இருந்தால். புதுச்சேரி மாநிலம், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறியிருக்கும்.
ஆனால் இப்போது எப்படி இருக்கிறது?
வட இந்திய அதிகாரிகளின், வேட்டை காடாக மாறியிருக்கிறது. அதிகாரத்தை குவித்து வைத்து, ஆட்சியாளர்கள் சுயநல அரசியல் நடத்துகின்றனர்.
- புதுச்சேரி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.
- சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில்.
- விபச்சார விடுதியாக மாறுகிறது.
- கலாச்சார சீரழிவால் சட்டம் ஒழுங்கு கெடுகிறது.
- ஆட்டம், பாட்டம், குடி, கும்மாளம்,
இதுதான், புதுச்சேரி மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலை.
மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி விட்டன. ஆட்சியாளர்களே! மக்களே! இனிமேலாவது தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
நமது தேடுதலை அரிக்க மேடுவிலிருந்து ஆரம்பிப்போம்.
இந்த பதிவு இத்துடன் முடிகிறது. நன்றி.
ஆம் ஆத்மி கட்சியின் மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.