புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 8-9 .
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அனைத்து கட்சிகளும், வாக்குறுதிகளை வாரி வழங்கின.
வழக்கம் போல மாநில அந்தஸ்து கோரிக்கையும், பஞ்சாயத்து, தேர்தலும் முக்கிய இடத்தை பிடித்தது.
இதற்கு முக்கிய காரணம், புதுச்சேரியில் அப்போது புதிய இயக்கம் தோன்றியது.
அது புதுச்சேரி மக்கள் இயக்கம்.
அதில், வியாபாரிகள், கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள், ஒன்று பட்டு, மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.
மாநில அந்தஸ்து கோரிக்கையை, அந்த மாநாடு வலியுறுத்தியது. அதனால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த இயக்கத்துடன், அனைத்து கட்சிகளுக்கும், புதுச்சேரி வளர்ச்சிக்கான 82 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது.
இதன் ஒருங்கிணைப்பாளர் திரு. தாமோதரன்.
இணை ஒருங்கிணைப்பாளர்கள், திரு ப. சங்கரன், திரு ரவி சீனுவாசன். ஆகியோரும். இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
புதிய ஆட்சி மிகுந்த சிரமத்துக்கு இடையே பதவி ஏற்றது.
ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து, மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வரை, ஒரு மவுன யுத்தமே நடைபெற்றது.
கொராணா கொடுமையில் மக்கள், இதை கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் ஆட்சி வேக செயல்பாடு புதுச்சேரி அரசை சிக்கலுக்கு உள்ளாக்கியது.
இலாகா பிரிப்பதில் சிக்கல்.
32 துறைகளில், 16 துறைகளை, முதல்வரே வைத்து கொண்டார்.
கூட்டணி கட்சிக்கு, வெறும் ஐந்து துறைகளே ஒதுக்கப்பட்டன.
இந்த புகைச்சல் அடங்குவதற்கு முன்பு பஞ்சாயத்து தேர்தல் வந்தது.
சட்டசபையில் முதல்வர் அறிவித்த பல திட்டங்கள், அப்படியே அந்தரத்தில் தொங்கின. அதிகாரிகள் அவற்றை மதிக்கவில்லை.
முதல்வர் ஒரு பக்கம், கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆளுநர் மறுப்பக்கம்.
தீபாவளிக்கு, அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்க, கால தாமதமானது.
பஞ்சாயத்து தேர்தலை தள்ளிப் போட, அனைவருமே ஒன்று கூடினர்.
நீதிமன்றத்தை நாடி, உத்தரவும் பெற்றனர்.
இடையில், மத்திய அரசு, திடீரென பெட்ரோல் டீசல் விலையை குறைத்தனர். ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை, இதில் இது வேறு.
வவுச்சர் ஊழியர்களுக்கு 10,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த திட்டம், அமலாகாமல் இருக்க, அந்த ஊழியர்கள். தலைமை செயலரை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இடையில் கனமழை, வெள்ளம் ரோடுகள் குண்டும் குழியுமாக, மக்கள் அவதிப்பட, முதல்வரின் அதிரடி அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பகுதி-10
மழைக்கால நிவாரணமாக, 5000 ரூபாய் அறிவித்தது. அந்த அறிவிப்பு, அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆனால், சட்டியில் ஒன்றும் இல்லை.
முதல்வரின் எதிர்ப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தலைமை செயலரை நோக்கி இருந்தது. மற்றும், கூட்டணிக்குள் மோதல், அதிகாரிகளுக்குள் மோதல், இப்படியாக, குண்டு சுவற்றுக்குள்ளே குதிரையாட்டம் ஆடினால், எப்படி?
முதல்வர் என்ன செய்து இருக்க வேண்டும்?
டில்லி சென்று, பிரதமரை, உள்துறை அமைச்சரை, நிதியமைச்சரை சந்தித்து பேசியிருக்க வேண்டும்.
புதுச்சேரி நிலைமையை விளக்கி, இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
அவ்வப்போது மக்களுக்கு நாக்கில் தேனை தடவுவது. கடைசியில் ஏமாற்றத்தை அளிப்பது, ஒரு நல்ல ஆட்சியாளர்களுக்கு நல்ல தல்ல.
மக்கள் முதல்வர், செய்ய வேண்டியது என்ன?
- தனக்காக ஓதிக்கிகொண்ட பல துறைகளை, மற்ற மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து தர வேண்டும்.
- அமைச்சரவையை கூட்டத்தை உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும்.
- டில்லி சென்று, நிதிப்பற்றாக்குறை போக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்.
- தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய தொழில் வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்.
- கூட்டுறவு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும்…
- அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டி பேசி, இனியும் நீதிமன்றம் செல்லாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
- குண்டும் குழியுமான சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
- அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், பஞ்சாலைகள் சரி செய்வதோடு அரசு துறை காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
- நிலுவையில் உள்ளசம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
இது போன்ற பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்துதீர்த்து வைக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், அனைத்து உயர் அதிகாரிகளிடமும் கலந்து பேசி, வெளியிடுவதோடு அரசாணையோடு வர உறுதி செய்யவேண்டும்.
மக்கள் நம்பிக்கை பெறுகின்ற அரசாக இது இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு.
சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்க அமைப்புகளும் இதைத்தான் விரும்புகின்றன.
அழகு மிகு புதுச்சேரி, இப்படி பாழ் பட்டு கிடைக்கிறது.
அதை சீரமைக்க அனைவரும் ஒன்று பட்டால் ஒழிய, இதற்கு வேறு விமோசனம் கிடையாது.
இப்போதைய அரசியலில், விஷக் காற்று கலந்து விட்டது.
- ரியல் எஸ்டேட் மாபியா க்கள்.
- மதுபான கடை மாபியா க்கள்.
- கிரிமினல்கள். அரசியலில் இரண்டறக்கலந்து முழு ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர்.
இது எங்கு கொண்டு போய் விடுமோ, என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த கும்பலுக்கு அஞ்சி அடங்கி கிடப்பது மக்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் தான்.
இது, நல்ல வளர்ச்சி பாதைக்கான அறிகுறி அல்ல.
இதை, வளர விட்டால் எதிர்காலத்தில் பேராபத்தாய் முடியும்.
இதை, இப்போதே கிள்ளி எறிய வேண்டும்.
இதை செய்ய இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.
பணம் தான் அனைத்தையும் முடிவு செய்யும் என்றால்.
நல்லவர்கள் இங்கு நிம்மதியாக, வாழ முடியாது.
இளைஞர்களே.
இதற்கு ஒரு சரியான முடிவை உங்களால் மட்டுமே எடுக்க முடியும், இந்த ஆதிக்க சக்திகளின் ஆணி வேர்களை, உங்களால் மட்டுமே பிடுங்கி எரிய முடியும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு..
புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 10 க்கு இங்கே சொடுக்கவும்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.