08-10-21 பத்திரிகை செய்தி: சட்டபேரவைத்தலைவர் அலுவலகம் புதுச்சேரி
அனைத்து சட்டப்பேரவை உறுபினர்களின் கோரிக்கையை ஏற்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் குளறுபடிகளை பற்றி பேசி கலந்துரையாடல் நடத்திட முடிவு செய்யப்பட்டு 09-10-21 காலை 10:30 மணிக்கு சட்டப்பேரவை செயலக வளாகத்தில் நான்காவது தளத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், உள்ளாட்சி துறை செயலர், சட்டத்துறை செயலர் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆண்டாண்டு காலமாக நடைமுறையிலுள்ள நகராட்சி பஞ்சாயத்துச் சட்டங்களில் உள்ள ஷரத்துகள் படி உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில், பிற்படுத்தப்ட்ட சமுதாயத்தினருக்கு உரிய இட ஒதிக்கீடு கொடுத்த பின்தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டுமென அறிவுறுத்தவும் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் கருத்தின் அடிப்படையில், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்திடவும் இக்கூட்டத்தில் கலந்தாசனை செய்யப்பட உள்ளது.