பான் பேப் கூட்டுறவு கைத்தறி நிறுவனத்தின் தற்போதைய நிலை…
புதுச்சேரியில் பாரம்பரிய தொழில் கைத்தறி நெசவு… இது ஏற்றுமதி வரை தனது தொழிலை விரிவு படுத்தியது…
புதுச்சேரி நகரப் பகுதியில் முத்தியால்பேட்டையில்.. இதை ஆரம்பித்து.. சுமார்… 800 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன் பெற்று வந்தனர்… இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு பல கோடிகள் இருக்கும்…
இதை மேம்படுத்தவும்.. இந்த தொழிலை பாதுகாக்கவும் இந்த தொழிலை நவீனப் படுத்தவும்… வருடம் தோறும் அரசு நிதியுதவி அளித்து வந்தது…
கடந்த ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டன…
கைத்தறி தொழிலை நாசப்படுத்தியது…
நெசவாளர்கள் வேலை இழந்ததால்… வேறு வேலைக்கு சென்று விட்டனர்….
கடந்த ஐந்து ஆண்டுகளில்… இந்த கூட்டுறவு நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது…
இதற்கு காரணம் கடந்த காங்கிரஸ் ஆட்சியும்.. அதைத் தொடர்ந்து நடக்கும் தற்போதைய ஆட்சியும்… நிர்வாகத் திறமையற்ற அதிகாரிகளாலும்…
ஒரு கூட்டுறவு கைத்தறி ஏற்றுமதி நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட தோடு அந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தையும்… கொடுத்த கடனுக்கு ஆக புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது….
தற்போது அந்த நிறுவனத்தில்..
சுமார் 28 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்… இவர்களுக்கு கடந்த 47 மாதங்களாக சம்பளம் இல்லை…
இங்கு தறி நெய்யும் சுமார் 100 க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தொழில் இல்லை கூலி இல்லை..
இதுதான் இந்த நிறுவனத்தில் தற்போதைய நிலை…
இது ஒரு புறம் இருக்க… அரசிடம் இருந்து வரவேண்டிய தொகை வரவில்லை…
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி உயர்ந்து கொண்டே சென்றது…
எதையுமே கவனிக்க ஆட்சியாளர்களுக்கும் சரி..
அதிகாரிகளுக்கும் சரி நேரம் இல்லை….
பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தையும் உரிய நேரத்தில் அளிப்பது இல்லை…
தலைமை செயலகத்தில் நிதித் துறையில் பல கேள்விகள் கேட்டு அலைக்கழிக்கப்படுகிறது…
அப்புறம் எதற்கு பட்ஜெட்..
அப்புறம் எதற்கு ஆட்சியாளர்கள்..
அப்புறம் எதற்கு அதிகாரிகள்…
எல்லாமே தெண்ட கருமாந்திரம்…..
பணிபுரியும் நெசவாளர்களுக்கு தொழில் இல்லை.. கூலி இல்லை…
பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் இல்லை….
ஏற்கனவே ஏ எப் டி இடத்தை விற்கவும்.. சுதேசி மில் இடத்தை விற்கவும் திட்டம் இட்டவர்கள்… இப்போது நகரின் மத்தியில் உள்ள பல கோடி மதிப்பிலான இடத்தை விற்கவும்… ஏழை நெசவாளர்கள்.. பணி புரியும் ஊழியர்களின் வாழ்வை கெடுக்க திட்டமிட்டு உள்ளனர்…
இதே நிலையில் தான்… புதுச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன….
பாரம்பரிய தொழிலான நெசவுத் தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளன
அரசு இனிமேலாவது ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்குமா…
ஊழியர்களும் நெசவாளர்களும் இத்தகைய அரசின் அராஜக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்களா..
இடத்தை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த நீதிமன்றத்தில் தடை பெறுவார்களா…
காலம் தான் பதில் சொல்லும்…
