ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி.. விழிப்புணர்வு பதிவு… தொடர்ச்சி …. 3

புதுச்சேரியில் ஊழலில் இரண்டாவதாக இடம் பிடிப்பது…

  • தன்னாட்சி நிறுவனங்கள்…
  • கூட்டுறவு நிறுவனங்கள்..
  • அரசு சார்பு நிறுவனங்கள்….

இவை அனைத்துமே மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் அமைந்ததாகும்….

நிறைய பேருக்கு இந்த 73 தன்னாட்சி நிறுவனங்களும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை…

இவை உண்மையிலேயே மக்கள் பிரதிநிதிகளை கொண்டு நடத்த வேண்டும்…

அரசு இதற்கு உதவி செய்கிறது….

பல நிறுவனங்கள் இதன் கீழ் இயங்கு கின்றன…

உதாரணமாக

தொழில் நுட்ப கல்லூரி..

அரசு மருத்துவ கல்லூரி போன்றவை இது போன்று சங்கத்தின் கீழ் இயங்குகின்றன…
(இந்த 73 தன்னாட்சி நிறுவனங்கள் பெயர்களை நாளை விரிவாக பதிவு செய்கிறேன்)…

  • இவை எவ்வாறு இயங்குகின்றன…
  • இதனால் யாருக்கு என்ன பலன்…
  • பணி நியமனம் எப்படி செய்யப்படுகின்றனர்..
  • வாரியங்கள் எவ்வாறு செயல்படுகின்றன…

இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதில்…

பணம் இல்லாத காரணத்தால் இப்போது தூங்கி வழிகின்றன…

வருடந்தோறும் கொடுக்கும் பணம் இவர்களது சம்பளத்துக்கே சரியாக போகிறது…

பாதி நிறுவனங்களுக்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை…

இதை நிர்வகிப்பது யார்? உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் கூடுதல் பொறுப்பு என்று வைத்துக் கொண்டு…. கும்மாளம் போடும் வேலைதான் நடக்கிறது.

சுமார் பத்து நிறுவனங்களை தவிர அனைத்துமே நலிவடைந்த நிலையில் உள்ளன…

கொல்லைப் புற நியமனங்கள் இங்கு தான் அதிகம் நடைபெறுகின்றன…

அதிகாரத்தை பகிர்ந்து தராமல் ஆட்டம் போடும் துறைகளில் இதுவும் ஒன்று….

வேண்டிய துறைக்கு நிதி ஒதுக்கப்படும்…
செலவுகள் செய்ய படும்…

யாருக்குமே தெரியாத இரண்டு முக்கிய நிறுவனங்கள் உள்ளன…

ஒன்று… நகர வளர்ச்சி முகமை.. ( PUDA)

இரண்டாவது.. மாவட்ட கிராம வளர்ச்சி முகமை.. (DRDA)

கிராம வளர்ச்சியை ஏற்படுத்தவும்.

நகர வளர்ச்சி ஏற்படுத்தவும் இயங்கும் நிறுவனங்கள் ஆகும்…

எம் எல் ஏ. மற்றும்  எம். பி. நிதி இவர்கள் மூலம் தான் செலவுகள் செய்யப்படுகிறது..

இதன் செயல் பாடுகள் மர்மங்கள் நிறைந்ததாகவே கானப்படுகிறது…

இவை இரண்டும் ஆட்சியாளர்கள் கண்ணசைவில் செயல்படுபவை….

கூட்டுறவு நிறுவனங்கள்… அரசு சார்பு நிறுவனங்கள்..
செயல் பாடு ஊரே அறியும்…
முழுக்க முழுக்க அரசியல் தலையீடு பேரில் நடப்பவை…
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கே வேலை இல்லை…

அரசு சார்பு நிறுவனங்கள்.. அரசு அளித்த முதலீடு தொகை ரூ 714 கோடி கோடி…

இதன் மூலம் வரும் வருட வருமானம்… ஒரு கோடி கூட வருவதில்லை…
12 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கு கின்றன…

கூட்டுறவு நிறுவனங்கள் நிலையும் இதுவே…

அரசியல் தலையீடே இதன் அழிவுக்கு முக்கிய காரணம்…

இதற்கு அரசு போட்ட முதலீடு ரூ 358 கோடி…
இதனால் எந்த வருமானமும் இல்லை…
பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன.
.. இந்த தன்னாட்சி நிறுவனங்கள்… அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்… ஊழல் தலைவிரித்தாடியதின் விளைவாக… இன்று பல ஆயிரம் ஊழியர்கள்.. வாழ்வாதாரம் இழந்து சம்பளம் இழந்து.. வேலை இழந்து… பசி பட்டினியால் குடும்பத்துடன் தெருவில் அலையும் அவலம்…
கடந்த ஆட்சியில் இதற்காக அமைக்க பட்ட விஜயன் கமிட்டி அறிக்கை… சிபிஐ யே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்… அலமாரியில் பத்திரமாக இருக்கிறது…

இந்த நிறுவனங்களின் ஊழல்களை அவர் அதில் தெளிவாக தெரிவித்து உள்ளார்…

ஒரு அரசு சார்பு நிறுவனத்தை (PRTC) பற்றி அறிக்கையில் இதன் ஊழலை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரைத்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்… (இந்த அறிக்கை மிக விரைவில் எங்களுக்கு கிடைக்கும்.. பிறகு அது தொடர்பான விரிவான தகவல்கள் வரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »