Puducherry Budget

அன்பார்ந்த… சமூக ஆர்வலர்களே… சமூக அமைப்புகளின் தலைவர்களே.

சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களே…

புதுச்சேரி. மாநிலத்தின் முழு தகவல் பற்றியும்…

செயல்படாத நிலையும்..

கிடப்பில் உள்ள நீண்ட கால திட்டங்களும்.

அதிலுள்ள ஊழலும் முறைகேடுகளும், புதுச்சேரி மாநிலத்துக்கான வளர்ச்சி திட்டங்களையும், இது வரை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு வந்தது.

இதன் நோக்கமே இளைஞர்கள்… இளம் பெண்கள்.. அரசியலில் பங்கு கொண்டு ஊழல் அற்ற நேர்மையான பேராற்றல் மிக்க உரிமைகளை உரக்க குரல் எழுப்ப கூடிய வகையில், வரும் பஞ்சாயத்து தேர்தலில் களம் கான ஏராளமானோர் ஆர்வமாக இருக்கின்றனர்.

அனைவருமே முழு தெளிவு பெற்று மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்….

புதுச்சேரி அரசு, வரவு செலவு கணக்கு தணிக்கை அறிக்கை 2019..2020 வரை வெளியிட்டுள்ளது…

ஆகவே நமது மாநிலத்தில். வருவாய் எவ்வளவு வருகிறது.. எங்கிருந்து வருகிறது…
அதில் எவ்வளவு எதற்காக செலவாகிறது..

இதில் நடைபெற்ற முறைகேடுகள்.

அரசின் செயல் பாடுகள் ஆகியவற்றை அறிய…

வரவு செலவு தணிக்கை அறிக்கையை உங்களுக்கு பதிவு செய்கிறேன்.
அதைப் படித்து தெளிவானால் மக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்….

2019..2020 தணிக்கை அறிக்கை 2021 ம் ஆண்டு செப்டம்பர் 3 ந்தேதி சட்டமன்றத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

2019..2020 வரவு செலவு தணிக்கை அறிக்கை விவரம்….

புதுச்சேரி மொத்த வரவு…

  1. வரி வருவாய் ரூ 2475 கோடி (31.6293 % )
  2. வரி இல்லாத வருவாய் ரூ 1638 கோடி (21.9329 % )
  3. மத்திய அரசிடமிருந்து ஜி எஸ் டி மான்யம் ரூ 2668 கோடி (34.0958% )
  4. மத்திய அரசிடம் கடனாக பெற்றது ரூ 1044 கோடி (13.3418 % )

இப்படி மொத்தமாக வரவு வந்தது… ரூ 7825.கோடி (100%)

  • 1. வரி வருவாய் ரூ 2475 கோடி (31.6293%)
  • விற்பனை வரி ரூ 597 கோடி (7.6293 % )
  • மாநில கலால் வரி ரூ 868 கோடி (11.0926 % )
  • பதிவு ஸ்டாம்ப் மூலம் ரூ 88.கோடி (1.1246 % )
  • வாட் ஜி எஸ் டி மூலம் ரூ 781.கோடி (9.9808 % )
  • வாகன வரி மூலம் ரூ 139 கோடி (1.7763 % )
  • இதரம் ரூ 2.கோடி (0.0255 % )
  • 2. வரி இல்லாத வருவாய் ரூ 1638 கோடி (21.9329 % )
  • வட்டி மூலம்ரூ 99 கோடி (1.2651% )
  • டிவிடெண்ட் மூலம் ரூ 3 கோடி (0.0383% )
  • மின் வரி மூலம் ரூ 1423 கோடி (18.1853 % )
  • மருத்துவ சுகாதாரம் மூலம்  ரூ 11 கோடி (0.1406 % )
  • குடிநீர் வரி மூலம் 21 கோடி (0.2684 % )
  • துறைமுக மூலம் ரூ 12 கோடி (0.1533 % )
  • வீடு மூலம் ரூ 7 கோடி (0.0895 % )
  • கல்வி மூலம் ரூ 23 கோடி (0.2939 % )
  • இதரம் ரூ 39 கோடி (0.4984 % )
  • 3. மத்திய அரசிடமிருந்து ஜி எஸ் டி மான்யம் ரூ 2608 கோடி (34.3291 % )
  • மான்யம் மாக வந்தது.. ரூ1568 கோடி (20.0383 % )
  • ஜி எஸ் டி இழப்பீடு ரூ 1040 கோடி (13.2907 % )
  • 4. மத்திய அரசிடம் கடனாக பெற்றது ரூ 1044 கோடி (13.3418 % )
  • மத்திய அரசிடம் பெற்ற கடன்…. ரூ 1044 கோடி  (13.3418 % )

ஆக 2019..2020 ல் மொத்த வரவு ரூ 7825 கோடி( 100% )

புதுவை அரசின் செலவுகள் பின்வருமாறு:

இந்த செலவானது. மூன்று வகையாக. பிரித்து. செலவிடப்படுகிறது…

  1. General service
  2. Social service 
  3. Economic service
    என மூன்று வகையாக. பிரிக்கப்பட்டு
  • General service மூலமாக ரூ 2313 கோடி (29.5591 % )
  • Social service மூலமாக ரூ 2440 கோடி (31.1821 % )
  • Economic service மூலமாக  ரூ 2083 கோடி (26.6198 % )
  • மொத்தம் ரூ 6836 கோடி (87.3610% )
  • முதலீடு செய்த செலவு..ரூ 327 கோடி (4.1789 % )
  • கடனுக்கான வட்டி செலுத்தியது ரூ 762 கோடி (9.7380 % )
  • ஆக மொத்த செலவு ரூ 7925. கோடி (101.2780 % )

மூன்று வகையான செலவுகளுக்கும் ஒதுக்கும் தொகை விபரம் 

  • அரசு ஊழியர் சம்பளம்.. ரூ 2364 கோடி (30.2109% )
  • அரசு ஊழியர் பென்ஷன்… ரூ 994 கோடி (12.7029 % )
  • வாங்கிய கடனுக்கு வட்டி ரூ 690 கோடி (8.8179 % )
  • மான்யம் நிதி.. ரூ 229 கோடி (2.9265 % )
  • அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதியுதவி ரூ 790.கோடி (10.0958 % )
  • மின்சார கொள்முதல்.. ரூ 1600 கோடி (20.4473 % )
  • மற்றவை ரூ 159 கோடி (2.0319 % )
  • முதலீடு செலவு.. ரூ 327 கோடி (4.1789 % )
  • கடனுக்கான வட்டி செலுத்தியது ரூ 762 கோடி (9.7380 % )
  • மொத்த செலவு… 7925 கோடி 101.2780 % )
  • மொத்த வரவு ரூ 7825 கோடி (100.0000 % )
  • பற்றாக்குறை ரூ 100 கோடி (1.2780 % )

மொத்த வரவு தொகை ரூ  7825 கோடியில், மத்திய அரசிடம் பெற்ற கடன்  ரூ 1044 கோடி (13.3419 % )

மீதி உள்ள வரவு ரூ 6781 கோடி.

இதில், அரசு ஊழியர் சம்பளம் மற்றும் பென்ஷன்

  • ரூ 2364 கோடி (34.8621 % )
  • ரூ 994 கோடி ( 14.7028 % )
  • ரூ 3358 கோடி (49.5207 % )

அதாவது மொத்த வருவாயில்… 49.52 % சதவீதம்…

வட்டி செலுத்தியது ரூ 690.கோடி ( 10.1754 % )

கடன் அசல் செலுத்தியது ரூ 762 கோடி (11.2372 % )

அசல் மற்றும் வட்டிக்காக   ரூ 1452 கோடி (21.4127 % )

இதில் மின்சார கொள்முதல் ரூ 1600 கோடி (23.5953 % )

மொத்த வருவாயில் அதாவது 100 ல் 95 சதவீதம் இதற்காகவே செலவிடப்படுகிறது.

மீதி உள்ளது 5 சதவீதம் மட்டுமே..

ரூ 35 கோடி மட்டுமே…

இதற்கு மேல் மான்யம் வழங்குவது… 229 கோடி..

அரசு சார்பு நிறுவனங்கள் நிதியுதவி ரூ 790 கோடி..

முதலீடு செலவு ரூ 327 கோடி..

மொத்தம் ரூ 1346 கோடி…

இது வருவாயில்… 20 சதவீதம்..

இருப்பது 5 சதவீதம் மட்டுமே…

மீதமுள்ள 15 சதவீதம் கடன் பெற்று நடத்த வேண்டிய சூழ்நிலை…

இதில் புதிய திட்டங்களோ… வேலை வாய்ப்பு அளிக்க கூடிய திட்டங்களோ… உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களையோ தீட்ட முடியாது…

வருடா வருடம் கடன் வாங்கி தான் காலத்தை ஓட்ட வேண்டும்…

வரவு செலவு தணிக்கை முற்றும்…………………………………………….

இதில் கூறப்பட்டுள்ள தணிக்கை குறைபாடுகள்… மீது அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை… அரசு துறைகளின் செயல் பாடுகளும் மோசமாக உள்ளதை இந்த தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது…

இவற்றை தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களும். சமூக ஆர்வலர்களும் இதனை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

2019..2020.ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பல்வேறு துறைகளில்.. செலவு செய்யாமல்..
ரூ 948 கோடி சேமிக்கப்பட்டுள்ளது…

நிர்வாகத் திறமையுள்ள அரசாக இருந்தால், இதனை திறம்பட பயன்படுத்தி இருக்கலாம்…

கடந்த காங்கிரஸ் அரசு ஆளுநரை ஒரு காரணம் காட்டி புதுச்சேரி மாநிலத்தையே நாசமாகாகிவிட்டது….

கடந்த ஆட்சியில் மக்களை ஏமாற்றியது தான் மிச்சம்….

நிர்வாகத்தில் படு தோல்வி அடைந்தது….

பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற அதிகாரத்திமிரில்… ஆட்சி நிர்வாகத்தில் பெரும் கோட்டை விட்டனர்…

விளைவு….

வணிக வரித்துறையில்…

2008..2009 முதல் 2019..2020 வரை

  • விசாரணையில்  உள்ள வழக்குகள் 22060
  • இதில் முடிக்கப்பட்ட வழக்குகள் 1533
  • மீதி விசாரிக்க வேண்டிய வழக்குகள் 20527

இதில் கேள்வி என்னவென்றால்… அலுவலகத்தில் ஒழுங்காக பணி நடக்கிறதா? என்பதே…

இதே போல…

  • அரசுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ 1101.41 கோடி..
  • மின் துறையில் வரவேண்டியது. ரூ 709.61.கோடி…
  • இதில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.. ரூ 238.87 கோடி…
  • வணிக வரித்துறையில்..
  • வரவேண்டிய நிலுவைத் தொகை.. ரூ 274.21 கோடி
  • இதில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது ரூ 229.79 கோடி…
  • கலால் துறையில்
  • வரவேண்டிய தொகை 67.43 கோடி…
  • இதில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தொகை ரூ 39.07 கோடி
  • பொதுப் பணித் துறையில்
  • வரவேண்டிய தொகை.. ரூ 41.59 கோடி
  • இதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தொகை ரூ 11.51 கோடி….

இப்படி, வரவேண்டிய ரூ 1101.41 கோடியில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தொகை ரூ 517.44 கோடி…

இதனை எந்த அமைச்சர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ கேட்க மாட்டார்கள்…

தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களும்…
சமூக ஆர்வலர்களும் தான்.. இதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும், மக்களிடம் இதனை கொண்டு செல்லவும், தூங்கி வழியும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தை நிறுத்தி வைக்க மக்கள் ஆதரவுடன் போராட்டம் நடத்த வேண்டும்….

அதிகாரிகளின் கூட்டு களவானித்தை அம்பலப்படுத்த. இது தான் தகுந்த சமயம்..

இந்த ஆட்சியாளர்களை நம்பி எந்த பயனும் இல்லை…
என்ற முடிவை எடுக்க ஏன் நாம் தயங்க வேண்டும்….

ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி கட்சியானது. இந்த விழிப்புணர்வை அளிப்பதோடு இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கவும் உதவும்…

இன்னும் அரசின் நிர்வாக முறைகேடுகள்.
தணிக்கை அறிக்கையில் உள்ளன…

நிதி நிர்வாகம் அனைத்துமே அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது..

ஆட்சியாளர்கள்.. திட்டங்களை மட்டுமே தீட்டுகிறார்கள்…
மற்ற அனைத்துபணிகளும் அரசு அதிகாரிகளே செய்கின்றனர்…

எந்த தவறு.. எந்த முறைகேடுகள் நடந்தாலும்..
அவர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்…
நம்மிடம் ஆவணங்கள் இருக்கும் போது இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்…
அப்போது தான் இந்த சர்வாதிகார மனநிலை கொண்ட அதிகாரிகளுக்கு பயம் வரும்..
நிர்வாகம் நேர்மையாக நடக்கும்

தணிக்கை அறிக்கையில்.. மேலும் கூறப்பட்டு உள்ளவை..

முறைகேடுகள் மற்றும் கையாடல் வழக்குகள்..
317 வழக்குகள் நீண்ட காலமாக முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு நடவடிக்கை எடுக்க படாமல் உள்ளன

இதன் மதிப்பு ரூ 27.88 கோடி

13 அரசு சார்பு நிறுவனங்களின். அரசு செய்துள்ள முதலீடு…

ரூ. 728.36 கோடி..

டிவிடெண்ட்.. தொகை என்பது.. வருடத்திற்கு சுமார் ஒரு கோடி கிடைக்கிறது…

இரண்டு நிறுவனங்கள் மட்டுமே. லாபத்தில் இயங்குகின்றன.

செலவிடப்பட்டு அதற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்க படாமல் உள்ள நிலையில்..

1456 கேஸ் உள்ளது இதன் மதிப்பு ரூ114.62 கோடி..

இதில் பத்து வருடங்களுக்கு மேலாக ஆவணங்கள் இல்லாமல் உள்ளது..

ரூ 15.75 கோடி செய்த செலவுகளுக்கு இது போல் ஆதாரம் காட்டாமல் கருவூலத்தில் 653 கேஸ் உள்ளது, இதன் மதிப்பு ரூ 449.36 கோடி

இதில் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ளது 172 கேஸ் உள்ளது, இதன் மதிப்பு ரூ 23.10 கோடி.

இப்போது மத்திய அரசுக்கு தரவேண்டிய கடன் ரூ 8379 கோடி..

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு மற்றும் கிராஜூட்டி தொகை… ரூ 1070 கோடி..

ஆக மொத்தக் கடன் ரூ 9449 கோடி.

74 பணிகள்..
பொதுப் பணித் துறை..
மின் துறை ஆகியவற்றால் முடிக்கப் படாமல் உள்ளன..

இவற்றின் மதிப்பு ரூ 151.53 கோடி.

வருடா வருடம் மத்திய அரசு தனது திட்டங்கள் மூலம் நிதியுதவி தருகிறது…

2019..2020 ல் ரூ 201 கோடி வந்தது..

புரியாத இந்தி மொழி திட்டங்கள்.

இதில் பெருமளவு ஊழல்கள் நடைபெறுகிறது.

நன்றி வணக்கம்.

தொகுப்பு: திரு ராமலிங்கம் (புதுவை ஆம் ஆத்மி கட்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »