A Block day of India November-8A Block day of India November-8

ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றப்பட்ட தினம் இன்று…

இதனால் என்ன பலன் கிடைத்தது என்பது இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது…

பணமதிப்பு இழப்பில் பெரும் மதிப்பை இழந்தது பாமர மக்கள் மட்டுமே….

பலன் அடைந்தவர்கள் இருவர் மட்டுமே….

இருவரும்… அவர்களின் கொள்கைகளுமே…

பத்து சதவீத மக்கள் பலத்துடன் பணத்துடன் வாழ தொண்ணூறு சதவீத மக்களை பலி கொடுப்பது… அதாவது வாட்டி வதைப்பது… சுரண்டுவது.. வரிகளை போட்டு கொடுமைபடுத்துவது…

பத்து பேரை பலம் ஆனவர்களாக ஆக்கி
அவர்களுக்கு கீழ் பலகோடி பேரை அடிமைப் படுத்துவது..

இறுதியில் ஒரே நாடு ஒரே மதம் ஒரே மக்கள் என்ற கொள்கையின் கீழ்..

மக்களை பஜனை பாட வைப்பது..

ஜெய் ராம்… பாரத் மாதா க்கி ஜெ என கோஷம் போட வைப்பது….

பழைய ஜமீன் தார் முறையை கொண்டு வந்து மக்களை பழைய நிலைக்கு கொண்டு வருவது..

எதைச் சொல்வது…

கறுப்பு பணத்தை ஒழித்து பதினைந்து லட்சம் தருவோம் என்றது.. அதை சொல்லவா

பெட்ரோல் டீசல் பாதி விலையாக குறைப்போம் என்றது.. அதை சொல்லவா

ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம். என்றீர்களே அதைச் சொல்வதா
.
பணமதிப்பிழப்பு… நடவடிக்கைகள் எடுத்து 50 நாட்களில் முன்னேற்றம் என்றீர்களே அதை சொல்லவா.

ஜிஎஸ்டி வரி விதிப்பு… அனைத்து பிரச்சினை தீரும் என்றீர்களே அதைச் சொல்லவா..

அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு..வந்ததே.. அந்த ஆனந்த நிகழ்வை சொல்லவா

ரபேல் விமான பேர ஊழல்.. மூடி மறைத்தீர்களே அதைச் சொல்லவா

தேர்தல் முறைகேடுகள்… நடந்ததே வழக்குகள் கூட நிலுவையில் உள்ளதே அதை சொல்லவா..

கட்சிகளை கட்சி தலைவர்களை..
பாராளுமன்ற உறுப்பினர்கள்
சட்ட மன்ற உறுப்பினர்களை

விலைக்கு வாங்கினீர்களே.. அதைச் சொல்லவா

தொழிலாளர் நல சட்டங்களை குறைத்தீர்களே அதை சொல்லவா

விவசாய வேளாண் சட்டங்களை திருத்தி விட்டு… விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே அதை சொல்லவா..

பெகாஸஸ் மென்பொருள் பயன்படுத்தி எதிர்க்கட்சி நீதிபதி ஊடகவியலாளர்களை கண்கானித்தீர்களை அதைச் சொல்லவா.

எதைச் சொல்ல வேண்டும்…
என நீங்கள் நினைக்கிறீர்கள்…

மொத்தத்தில் எங்களை ஏமாற்றி குட்டிச்சுவருக்குள் முடக்கி வைத்து விட்டீர்கள்….

இதைத் தவிர நீங்கள் செய்த சாதனைதான் என்ன…….???????

தொகுப்பு: திரு ராமு கோவிந்தராஜ் (ஆம் ஆத்மி கட்சி)

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »