NR Congress election committment

தங்கள் கட்சி, தேர்தல் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையில் 12 வது பக்கத்தில், தாங்கள் மின்சாரம் என்ற தலைப்பில், அளித்துள்ள வாக்குறுதிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

  • மத்திய அரசிடம் இருந்து, 250 டன் நிலக்கரி பெற்று, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுடன் இணைத்து, புதுச்சேரிக்கு தேவையான 430 மெகா வாட் மின்சார உற்பத்தி தேவையை பூர்த்தி செய்வதோடு, மீதமுள்ள 1980 மெகா வாட் மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
  • தரையடித் தடம் மூலம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கேபிள் மூலம் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் எனவும்,
  • காரைக்காலில் பவர் கார்ப்பரேஷன் மூலம் அதிக மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்க படும் எனவும்,

வாக்குறுதி அளித்ததை ஆளும் அரசுக்கு ஞாபகப்படுத்துகிறோம். மத்திய அரசு இப்போது மின்சாரத் துறையை தனியார் மயமாக்க துடிக்கிறது.

  • மக்களிடம் வாக்குறுதி அளித்து விட்டு இப்போது அமைதி காப்பது எந்த விதத்தில் நியாயம்?
  • உங்கள் வாக்குறுதியை நம்பி வாக்கு போட்ட மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள?
  • இது கடந்த ஆட்சியில் நடந்தது என்று சொல்லி தப்பிக்க போகிறீர்களா?
  • பின்னர் தேர்தல் வாக்குறுதி ஏன் தந்தீர்கள்?
  • நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றவா?

ஓட்டு போட்ட பொது மக்களே! ஆளும் என் ஆர் அரசு. “நம் மண் நம் மக்கள்” என உறுதி தந்து நமக்கு சொந்த மான அரசு துறை தனியாருக்கு அளிக்கும் செயலுக்கு உடந்தையாக இருக்கலாமா? புதுச்சேரி மக்கள் பொங்கி எழும் இந்த நேரத்தில் அமைதி காக்கலாமா?

மீண்டும் தங்கள் தேர்தல் அறிக்கையில். 12 ம் பக்கத்தில் மின்சாரம் என்ற தலைப்பில் நீங்கள் அளித்த வாக்குறுதியை படித்து பார்க்கவும். மீண்டும் உங்கள் மவுனம் தொடர்ந்தால், அது நல்லதல்ல.

தொகுப்பு:

கோ ராமலிங்கம்
மக்கள் கண்காணிப்பு குழு

பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »