RTI rules and details

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த அதன் விதியும் விபரமும்.

  • 6 (1) தகவல் கோரி விண்ணப்பிக்கும் மனு.
  • 6 (3) தன்னிடம் தகவல் இல்லையென்றால், தகவல் இருக்கும் பொது அதிகார அமைப்பிற்கு, மனு பெற்ற 5 நாட்களுக்குள் மாறுதலில் அனுப்பவேண்டும்.
  • 19 (1) முதல் மேல்முறையீட்டு மனு (மேல் முறையீட்டு அலுவலருக்கு)
  • 19 (3) இரண்டாம் மேல் முறையீட்டு மனு ஆணையத்திற்கு.
  • 18 (1) புகார் மனு.
  • 5 (5) மாற்றியமைக்கப்பட்ட பொது தகவல் அலுவலர்.
  • 7 (1) மனு கிடைக்கபெற்ற 30 நாட்களுக்குள், பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்கவேண்டும்.
  • 19 (6) மனு கிடைக்கபெற்ற 30 நாட்களுக்குள், மேல் முறையீட்டு அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்கவேண்டும்.
  • 7 (6) குறிப்பிட்ட 7 (1 )  கால கெடுவிற்குள் தகவல் வழங்கவில்லைஎன்றால், கட்டணமின்றி வழங்கப்படவேண்டும்.
  • 7 (9) பொது அதிகார அமைப்பின், வள ஆதாரங்களை உரிய விகிதத்தில் அல்லாது, திசை திருப்பும் வண்ணம், அல்லது பிரச்சனையிலுள்ள பதிவுருவினை பாதுகாப்பதற்கு அல்லது அல்லது பேணி காப்பதற்குக் குந்தகம் விளைவிப்பதாக இருந்தாலன்றி, தகவல் சாதாரணமாக அளிக்கப்பட வேண்டும்.
  • 8 (1) தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு.
  • 8 (1) (h) புலனாய்வு நடவடிக்கைகளை அல்லது குற்றவாளிகளை கைது செய்தல் அல்லது அவர்கள் மீது குற்றவழக்குத் தொடர்தலை தடைசெய்யக்கூடிய தகவல் – வெளியிடுவதில் விலக்களிப்பு.
  • 8 (1)(j) தனிப்பட்டவரின் அந்தரங்கத்தில் விரும்பத்தகாத நுழைவதாக அமையும் பட்சத்தில், தனிப்பட்டவர் தொடர்பான தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு.
  • 2 (f) பொது அதிகார அமைப்பிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் வழங்கக்கூடிய தகவல்கள்.
  • 11 மூன்றாம் நபர் தகவல் – மனுதாரரின் மனுவைப் பதேர 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மொன்றாம் தரப்பு நாரிடம் ஆட்சேபனை குறித்த தகவல் அழுக்குமாறு தகவல் அனுப்பிட வேண்டும். கடிதம் கிடைக்கபெற்ற 1௦ தினங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் தமது விருபத்தை தெரிவிக்க வேண்டும்.
  • 18 (3)(b) ஆவணகளை தேடி கண்டிபிடித்தல் மற்றும் ஆய்வு.
  • 19 (8)(b) இழப்பீடு
  • 20 (2) பொது தகவல் அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூபாய் 250 வீதம், அதிகபட்சமாக ரூபாய் 25,000 வரை அபராதம் வித்தித்தல்.
  • 20(2) பொதுத்தகவல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்தல்.
  • 19 (7) மாநில தகவல் ஆணையத்தில் முடிவே இறுதியானது.

தொகுப்பு மற்றும் பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »