முதலில்,
- மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
- புதுச்சேரி மன்னின் மைந்தர்களுக்கான, வளர்ச்சிக்கான பணிகளாக அது இருக்க வேண்டும்.
- டில்லி மாநில மக்களுக்காக ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்கியது போல், துணிச்சலாக, நேர்மையான ஆட்சி அமைய ஊழலை ஒழிந்திட, புதுச்சேரியிலும் ஆம் ஆத்மி கட்சி, விசுவரூபம் எடுக்க வேண்டும்.
- மக்களை நாடி, மக்களுக்கான பணி முழுமையாக இருக்க வேண்டும்.
- பணம் படைத்த கட்சிகள் இன்னும் மக்களை இலவச மயக்கத்தில் வைத்துள்ளன. இந்த மயக்கத்திலிருந்து மக்கள் விடுபட, நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும்.
- அவர்களை கஷ்டம் என்ற சூறாவளி சுழலில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
- இதற்கான திட்டங்களோடு கிராமம் கிராமமாக களம் இறங்க வேண்டும். அதில், பல விஷயங்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
- உதாரணமாக: ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதற்கு யார் பொறுப்பு ? என்று கேள்வி எழுப்பினால், பொதுப் பணித் துறை, நகராட்சியை காட்டுவதும், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளை காட்டுவதும் வழக்கமாகி விட்டது.
உங்களுக்காக ஒரு புள்ளி விவரம். புதுச்சேரியில்,
- பொதுப் பணித் துறை மூலமாக 638 கிமீ சாலைகளும்.
- நகராட்சி மூலமாக 614 கிமீ சாலைகளும்.
- கொம்யூன் பஞ்சாயத்து மூலமாக 1198 கிமீ சாலைகளும் உள்ளன.
மாநில அரசானது, கொம்யூன் பஞ்சாயத்து, மற்றும் நகராட்சிக்கு நிதி அளிக்காமல் இருப்பதால் தான். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.
இதற்கு காரணம், பஞ்சாயத்து தேர்தல் நீண்ட காலமாக நடத்தப் படாததால், ஊழல் தலைவிரித்து ஆடியது. விளைவு, கேபிள் வரிகள் , வீடு வரிகள்கூட இவர்களால் வசூலிக்க முடிவதில்லை. கடந்த பத்தாண்டுகளாக தணிக்கை கூட செய்ய வில்லை. மாநில அரசும் நிதி தரவில்லை. மத்திய அரசும் நிதி தரவில்லை.
- லேசான குண்டும் குழியுமான சாலைகள், இன்று அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.
- அரசு அலுவலகங்களில் பணி ஒழுங்காக நடைபெறுவதில்லை.
- இவரை கேட்டால் அவரை காட்டுவார், அவரை கேட்டால் விடுப்பில் உள்ளவரை காட்டி தப்பித்து கொள்வார். மொத்தத்தில் மக்கள் ஒரே வேலைக்கு பல முறை அலையும் நிலை.
- இவர்களை வேலை வாங்க உரிய சட்டங்கள் இருந்தும், அரசு அமல் படுத்துவதில்லை.
- அரசாணை இருந்தும் பொதுமக்களும் அதைப்பயன்படுத்துவதில்லை.
- மத்திய அரசு நிதி குறைத்து வழங்குவதையும், மாநில தகுதி வழங்க மறுத்து வருவதையும், துணிச்சலாக கேட்கும் தைரியம் ஆளும் கட்சிக்கும் இல்லை, எதிர் கட்சிகளுக்கும் இல்லை.
- தணிக்கை அறிக்கை குறைபாடுகளை களைய அரசு எந்த நடவடிக்கை எடுப்பதில்லை.
- பல மத்திய அரசு திட்டங்கள், நீண்ட கால கோமா நிலையில் செயல்படுத்தாமல் உள்ளன.
இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆம் ஆத்மி கட்சி, தீவிர மாக களத்தில் இறங்கி, கிராமம் நகரம் தோறும் இளைஞர்களை ஒன்று திரட்டி, கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி, தகவல் பெறும் உரிமை குழுக்கள் ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே போதும். வரும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி நிச்சயம். நிச்சயமாக 40 சதவீத மக்கள் புதியதாக மாற்றத்தை விரும்புவர்.
- புதுச்சேரியில், அரசு ஊழியர்கள், மத்திய, தன்னாட்சி, உள்ளாட்சி, மற்றும் கூட்டுறவு, என சுமார் 50000 பேர் உள்ளனர்.
- புதுச்சேரியில் சுமார், சிறு வனிக கடைகள் 50000 க்கு மேற்பட்டு உள்ளது.இதில் சுமார் 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
- சிறுகுறு தொழிற்சாலைகள். சுமார் 10000 க்கு மேற்பட்டு உள்ளன. இதில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
- கூட்டுறவு, விவசாய மீனவ மற்றும் நெசவு தொழிலில் ஈடுபடுவோர் சுமார் 50000 பேர் உள்ளனர்.
இவர்கள் மேம்பாடு அடைய, கிராமப்புறம் பொருளாதார வளர்ச்சிக்கான தொழில் திட்டங்களை மக்கள் முன் வைத்ததால், மக்கள் நம்பிக்கை பெறுவதோடு, சுமார் 40 சதவீத ஓட்டுகளை சுலபமாக பெறலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை மக்கள் ஆதரவோடு விரட்டி யடிக்கலாம்.
இது கனவல்ல, நிஜமாக இதுதான் டில்லி மாநிலத்தில் நடந்தது.
- கடந்த ஐந்து ஆண்டுகளில், இரட்டிப்பு வருவாயை பெருக்கிய தோடு பல மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது.
- நாட்டையும் வீட்டையும் சுத்தப்படுத்த துடைப்பத்தை டில்லி மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அளித்தது.
- ஊழலை விரட்டியடிக்க வீட்டுக்கு வீடு துடைப்பத்தை வைத்து இருந்தனர்.
- புதுச்சேரியிலும் அந்த நிலை வரவேண்டும். படித்த இளைஞர்கள் அணிதிரள வேண்டும்.
- தேர்தலில் நின்று வெற்றி பெற்று, மக்களுக்கு சேவை செய்வதோடு ஊழல் பேர்வழிகளை ஊரை விட்டே விரட்ட வேண்டும்.
இந்த நிலை வெகு விரைவில் நடக்கும்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.