புதுச்சேரிக்கு இப்போதைய தேவை.

  1. மக்களை நேசிக்கும் மனிதாபிமானம் கொண்ட, தனிநபர் துதி பாடிகளுக்கு மயங்காத,
    அல்லக்கைகளின் அளப்பறைகளுக்கு அடங்கி நடக்காத, எளிமையான, விளம்பரம் தேடாத தலைவர்கள் தேவை.
  2. அதிகாரிகளை அடக்கி ஆளும் துணிச்சல் மிக்க திறன் படைத்த ஆட்சியாளர்கள் தேவை.
  3. அடங்கி நடக்கும், திறன் மிக்க, மனிதநேயம் மிக்க அதிகாரிகள் தேவை.
  4. முதலில் இடைக்கால நிவாரணமாக ரூ 5000 கோடி தேவை.
  5. தனி மாநில தகுதி தேவை.
  6. சம்பளம் இன்றி தவிக்கும் 5000 ஊழியர்களுக்கு சம்பளம் தேவை.
  7. வேலையின்றி வாடும் இளைஞர்களுக்கு, வேலை தேவை.
  8. பஞ்சாலைகளை திறக்க உடனடி நடவடிக்கை தேவை.
  9. பொருளாதார வல்லுநர்கள் கொண்ட வளர்ச்சி குழு தேவை.
  10. கூட்டுறவை காப்பாற்ற, கூட்டுறவு ஆலோசணைக் குழு தேவை.
  11. தனிக் கல்வி வாரியம் தேவை.
  12. தலைமை தகவல் ஆணையர் அலுவலகம் தேவை.
  13. லோக் பால் சட்டம் தேவை.
  14. சேவை பெறும் உரிமை சட்டம் தேவை.
  15. பஞ்சாயத்து தேர்தல் தேவை.
  16. உயர் நீதிமன்றம் கிளை தேவை.
  17. புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேவை.
  18. தொழிலாளர் நீதிமன்றம் தேவை.
  19. சிபிஐ கிளை அலுவலகம் தேவை.
  20. தனி பல்கலைகழகம் தேவை.
  21. கட்சி மாறாத சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.
  22. முழுமையான பட்ஜெட் போடும் சட்ட மன்றம் தேவை.
  23. ஓட்டுக்கு பணம் கொடுக்காத வேட்பாளர்கள் தேவை.
  24. லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள் தேவை.
  25. ஓட்டுக்கு பணம் வாங்காத மக்களும் தேவை.

ஒருநாள், புதிய புதுச்சேரி, இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாறும்.

தேவைகள் நிறைவேற, புத்தாண்டில் சபதமேற்போம்.

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »