ஆம் ஆத்மி கட்சியின் “வெற்றிவிழா” 9 வயது குழந்தையின் இரண்டாவது வெற்றி மாநிலம் பஞ்சாப்.
- திரு அரவிந்த் கேஜ்ரிவால் என்ற 42 இளைஞனால் 26 நவம்பர் 2012 தொடங்கப்பட்ட கட்சிதான், ஆம் ஆத்மி கட்சி.
- முதல் வெற்றி : கட்சி தொடங்கிய முதல் வருடமே காங்கிரஸ் கூட்டணியில் டெல்லியில் முதல்வராக அமர்ந்தார், பழைய கள்ளத்தனங்களை விட்டொழிக்காத காங்கிரசுடன் இனி பயணித்து பலனில்லை என்ற நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
- இரண்டாவது வெற்றி: உடன் வந்த தேர்தலில் 70க்கு 67 இடங்களை தனி மெஜாரிட்டியில் வென்று அதே முதல்வர் பதவியில் அரியணை ஏறினார்.
- மூன்றாவது வெற்றி: அடுத்து வந்த பஞ்சாப் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு, எதிர் கட்சி அந்தஸ்த்தை பெற்றார்.
- நான்காவது வெற்றி: 2022 பஞ்சாப் தேர்தலில் பஞ்சாப்பை 117க்கு 92 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி அந்தஸ்தை பெற்றார். எனவே, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
இந்த வெற்றிகள் அனைத்தும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள், அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. காணரம், கட்சி தொடங்கி 9 வருட காலத்தில், இரண்டு மாநிலங்களை, காசு கொடுக்காமல், சாராய சப்ளை செய்யாமல், EVMல் பிராடு வேலை பார்க்காமல். வென்றெடுக்க வேறு எந்த கட்சியாலும் முடியாது. எனவே எங்களுக்கு இது வெற்றி விழா கொண்டாட்டம்.
இதை போன்று ஒரு வெற்றி விழாவை புதுவையிலும் விரைவில் கொண்டாடுவோம். இந்தியாவிலேயே, ஊழலில்லா நேர்மையான, ஒரு நிர்வாகத்தை தருவோம் என்று, நெஞ்சை நிமிர்த்தி வாக்குறுதி கொடுக்கும் தைரியம் ஆம் ஆத்மி கட்சி க்கு மட்டுமே உண்டு.
ஊழலில்ல நிர்வாகத்தை செய்தோம், செய்துகொண்டி இருக்கிறோம். செய்வோம். இது கதையல்ல நிஜம்.
பதிவு:
