பொதுவாக ஒரு நகர காவல் ஊழியரோ (அதிகாரியோ), போக்குவரத்து காவல் ஊழியரோ (அதிகாரியோ), போக்குவரத்து காவல் துறை ஊழியரோ (அதிகாரியோ), வாகன தணிக்கை என்ற பெயரில், ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடுவதுண்டு. அதை கண்டு நாமும் ஒரு வித அச்சத்துடன் வாகங்களை நிறுத்துவோம். அந்த அச்சத்திற்கு காரணம், நம்மிடம் ஏதாவது ஆவனைகள் இல்லாமலோ, அல்லது நம்முடைய வாகனத்தில் ஏதேனும், சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் இருந்தாலோ, அல்லது, சட்டப்படி அறிவுறுத்தல் படி வாகனத்தை நாம் இயக்காத காரங்களோ இருக்கலாம்.
அப்படி சட்ட மீறல்கள் எதுவும் நம்மீதோ, நம் வாகனத்தின் மீதோ இல்லாத போதும், ஏதாவது ஒரு அபராதத்தை விதித்து பணம் கட்ட சொல்லி பொதுமக்கள் அனைவரையும் கட்டாயபடுத்துகின்றனர் அரசு ஊழியர்கள் . இது இந்தியாவில் மிக இயல்பான நிலையாக மாறிவிட்டது. வாக ஓட்டிகள் தன் மீது தவறு இல்லாத போதும், அந்த அபராதத்தை கட்ட முடியாது என்று சொல்லும் திராணி மக்களுக்கும் இல்லை.
அபராதம் விதிக்கப்பட்ட காரணம், என்னவென்றே தெரியாமல் 98 சதவீத மக்கள் அபராதத்தை தலையெழுத்து என்று தலையில் அடித்துக்கொண்டு கட்டுச்செல்கின்றனர். ஒரு சிலர் கேள்வி எழுப்பினாலும், அவர்கள் மீது காவல் ஊழியர் பாய்கின்றனர். என்னையே எதிர்த்து பேசுகிறாயா? என்னிடமே சட்டம் பேசுகிறாயா? என்று தாக்குதலுக்கு தயாராகின்றனர். அந்த நேரத்தில் எதிர்த்து கேள்வி கேட்ட 2 சதவீத நபர்களில் 1 சதவீத நபரும் பம்மிவிடுவார். கடைசி வரை சட்டப்போடாட்டம் மேற்கொள்வது மீதமிருந்த 1 சதவீத நபர்தான். அந்த 1 சதவீத நபரை பொய் வழக்கி போட்டு மிரட்ட அரசு ஊழியர்களே மிரளுவார்கள்.
எப்படி 1 சதவீத நபருக்கு தைரியம் வருகிறது? இந்த கேள்விக்கு முக்கிய காரணங்கள் சில.
- தன் உரிமையை யாருக்காகவும், எங்கும் விட்டுகொடுக்க மாட்டார்.
- யாருக்கும் அஞ்ச மாட்டார்.
- சட்டத்தை மீற மாட்டார்.
- தன்மீது தவறு இல்லாதபடி பார்த்துகொள்வார்.
- போலீஸ் ஸ்டேஷன் போக பயப்பட மாட்டார்.
- கோர்டுக்கு செல்ல பயப்பட மாட்டார்.
- நடைமுறை சட்டங்களை தினம் தினம் படித்து வைத்திருப்பார்.
- அப்படி சட்டங்களை படித்து தெரிந்து, அதை அனுபவ அறிவோடு கலந்து, தன் தைரியத்தை வளர்த்து கொள்கிறார்கள்.
- ஒரு ஊழியர் தவறு செய்தால், அடுத்து புகார் அளிப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருப்பார்.
- அளிக்கப்பட்ட புகாரை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அதை எப்படி நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லலாம் என்று, விபரம் அறிந்து இருப்பார்.
- இன்னும் பல.
எனவே, 99 சதவீத நபர்கள் கோழையாக வளர்ப்பது எது?
- நம் நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றது.
- பொதுவாக அரசு ஆணைகளும், சட்டங்களும், ஆங்கிலத்திலேயே வெளி வருகின்றன.
- அதனால், நடைமுறை சட்ட திட்டங்களை உடனடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.
- இன்று இருக்கும், தகவல் தொழில் நுட்ப உதவியால், பலர் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்த்து உதவுகிறார்கள்.
- சிலர் தன் முயற்சியில் மொழி பெயர்த்து படித்து வருகிறார்கள்.
- சட்டம் அறிவதை, ஒரு வீண் வேலை என்று கருதுபவர்கள். தானும் கோழையாகி, தன் குடும்பத்தையும் கோழையாக்கி, தன் நண்பர்கள், அக்கம் பக்கத்தார்களையும் முழு கோழையாக்கி விடுகின்றனர்.
- அந்த கோழைத்தனத்தின் விளைவு, தான் அடிமைகளா இருப்பதை அறிவுபூர்ணமாக ஏற்றுகொள்கிறார்கள்.
- அதனால், அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம், திசை மாறி, ஆணவமாக உருமாறியது.
- அந்த ஆணவத்தை அடக்க முடியாமல், இந்த கோழை அடிமைகள், லஞ்ச பிச்சை எடுக்கும், ஊழியர்களை லஞ்சம் கொடுத்து ஊக்குவித்து வருகின்றனர்.
இதற்கெல்லாம், உங்கள் வாழ் நாளிலிலேயே தீர்வு காணவில்லை என்றால், விளைவு படு மோசமாக இருக்கும். நாளை, உன் மகன் பொய்யான கற்பழிப்பு வழக்கில் உள்ளே போவான், உன் மகள், பொய்யான விபச்சார வழக்கில் கைதாவால்.
எனவே, விழுத்துகொள்ளுங்கள், தண்ணீரில் தலைவரை மூழ்கிவிட்டீர்கள், நீங்கள் ஆட்டிகொண்டிருக்கும் கைகளும் மூழ்விட்டால், உங்களை காப்பாற்ற சொல்லி யாரிடம் சொல்வீர்கள், எப்படி சொல்வீர்கள்?
ஒவ்வொரு வாரமும் சட்ட விழிப்புணர்வு கூட்டம் காரைக்காலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெறுகிறது. சாதி, மத, இன, கட்சிகள் பாகுபாடு இன்றி கலந்துகொள்ள அழைக்கிறேன்.
அழைக்கவும்: 7667 303030
பதிவு:
