AIARA-All India All-Rights Association

Ref: AIARA-20220624-1                                    புகார் தேதி: 24-06-2022

அனுப்புனர்:

MMY ஹமீது Cont: 7667 303030

தேசியத் தலைவர் (ARAIA) &

மாவட்ட தலைவர் (ஆம் ஆத்மி கட்சி)

46 வள்ளல் சீதக்காதி வீதி

காரைக்கால் – 609602

பெறுனர்கள்:

தலைமை செயலர் முதன்மைக் கட்டிடம்
தலைமை செயலகம்
புதுச்சேரி-605001
மாவட்ட ஆட்சியர்
ஆட்சியர் அலுவலகம்
காரைக்கால்-609602
நிர்வாக பொறியாளர்
பொறியியல் பிரிவு
நகராட்சி அலுவலகம்
காரைக்கால்-609602
நகராட்சி ஆணையர்
நகராட்சி அலுவலகம்
காரைக்கால்-609602
இயக்குனர்
சுகாதாரத் துறை
காரைக்கால்-609602
சட்டமன்ற உறுப்பினர்
தெற்கு தொகுதி
காரைக்கால்-609602

பொருள்:  காரைக்கால் முழுவதும், தற்சமயம் பழுது பார்க்கப்பட்டு வரும் கழிவு நீர் சாக்கடைகளின் மோசமான தரம் மற்றும் சுகாதாரமற்ற முறையை உடனே நிறுத்தி,  சரியான முறையில் செய்துத்தர கோரிக்கை.

ஐயா, கடந்த சில மாதங்களாக காரைக்கால் நகரம் முழுவதும், காரைக்கால் நகராட்சியால் விடப்பட்ட ஒப்பந்தத்தின் வாயிலாக கழிவு நீர் சாக்கடைகள் பழுது பார்த்தல் மற்றும் புதிதாக அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறன.

காரைக்கால் நகரத்தை பொறுத்தவரை  (L) மற்றும் (ப) வடிவ சாக்கடைகள் கட்டுவதற்கு ஒப்பந்தபுள்ளிகள் கோரப்படுகின்றன. ஆனால், தற்போது கட்ட்பட்டுக் கொண்டிருக்கும் சாக்கடைகள் (I) அல்லது (II) வடிவில், அதாவது கழிவு நீர் சீராக ஓட தரைதளம் அமைக்காமல், ஒரு பக்க சுவர் அல்லது இரண்டு பக்க சுவர்கள் மட்டுமே   அதுவும் மிகவும் தரக்குறைவான நேர் சீரற்ற முறைகளில் கட்டப்படுகின்றன. .

இதனால், கழிவு நீர் ஓடுவதற்கு பதிலாக, வருடம் முழுவதிலும் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டு, அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி,, அதனால் கொசுக்களால்  நிம்மதியற்ற இரவு தூக்கமும், மற்றும்  வருடா வருடம் காரைக்கால் வாழ் மக்களுக்கு “டெங்கு” “மலேரியா” போன்ற உயிர்கொல்லி நோய்களும்  ஏற்படுகின்றன.

ஒப்பந்தம் விடப்படும் வேலைகள், தரமான கட்டுமான பொருட்களை கொண்டும், சரியான கலவைகளை கொண்டும், முறையாக கழிவுநீர்  தேக்கமின்றி ஓடும்படி  காட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்த்த பிறகே, ஒப்ந்தகாரர்க்ளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். ஆனால், இவ்வளவு தரக்குறைவாக கட்டப்படும், கழிவு நீர் சாக்கடைகளுக்கு எவ்வித கண்காணிப்பும் இன்றி மக்கள் பணத்தை பட்டுவாடா செய்துகொண்டு வருகிறது காரைக்கால் நகராட்சி நிர்வாகம்.

இப்படி அலட்சியமாக ஒப்பந்தகாரர்களும், அதிகாரிகளும் செயல்படுவதால் மக்கள் பணம் வீணாவதோடு, வருடா வருடம் அரசு நஷ்டத்தில் இயங்குவதோடு, சுகாதாரமற்ற வாழ்கை அமைவதோடு, காரைக்கால் நகரின் அழகும் பொலிவும் நாசமடைந்துவிட்டது.

காரைக்கால் வாழ்மக்கள் வாழ்க்கையோடு விளையாடும் தரமற்ற கட்டுமானங்களை கண்காணிக்கும் பொறுப்பு, காரைக்கால் வாழ் மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும், மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத்துறை இயக்குனருக்கும், நகராட்சி ஆணையர் மற்றும்  பொறியாளர்களுக்கும், தலைமை செயலகத்திற்கும் உள்ளதால், எவ்வித காலதாமதமுமின்றி உடனே பார்வையிட்டு தரமற்ற வேலைகளை நிறுத்தி,  புதிய தரமான வேலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கட்டுமான வேலைகள் நடைபெறும் இடத்திற்கு கண்காணிப்பாளர்கள் அனுப்புவதில் ஆட்கள் பற்றாக்குறை இருந்தால், காரைகாலில் இயங்கும் ஏதாவதொரு சமூக அமைப்புகளை தொடர்பு கொண்டு, இலவசமாக சமூக ஆர்வலர்களை பெற்று கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காரைக்கால்  வாழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

National President (AIARA) & District Convener (AAP)

Drainage - Google Docs

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »