புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம், இதை தட்டிக் கேட்க தைரியம் இல்லாத நம்மூர் அரசியல் வாதிகள்.
உள்ளாட்சி தேர்தலை முடக்கி வைத்து, நமது அதிகாரத்தை பறித்து, நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றனர். இது மிகப்பெரிய ஜனநாயக சதி, திட்டமிட்ட சதி. உள்ளாட்சி அமைப்புகள் என்பது மூன்றாவது ஜனநாயகம்,
- கிராமப்புற நகர்ப்புற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது.
- சாலைகள் சீரமைப்பது.
- சுத்தமான குடிநீர் அளிப்பது.
- தரமான மருத்துவ வசதி அளிப்பது.
இவை மூன்றாம் உள்ளாட்சி அதிகார அமைப்பின் கீழ் வருபவை.
அரசு இரண்டு பாதைகளாக சட்டமன்றத்துடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் இயங்க வேண்டும்.
- சட்டமன்றம் செய்ய வேண்டிய உண்மையான பணிகள் என்ன?
- மக்கள் பாதிக்காத வாறு புதிய சட்டங்களை இயற்றுவது.
- மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல திட்டங்களை வகுப்பது.
- மாநில அரசின் உரிமைகளை பெற்று தருவது.
- பட்ஜெட் போட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது.
இது தான் நடைமுறை. ஆனால், நமக்கு வாய்த்த இந்த அரசியல் வாதிகள், நமது அதிகாரங்களை பறித்து, தன் அதிகாரங்களை குவித்து, ஜனநாயகத்தை பணநாயகமாக்கி, நம்மை அடிமையாக்கி வைத்து இருக்கின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்ன?
- கிராம மற்றும் நகர மக்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது.
- இதற்கான திட்டங்களை வகுப்பது.
- இதற்கான செலவுகளை வரி மூலம் ஈடுகட்டுவது.
- அரசு அளிக்கும் திட்டங்களையும், நிதியையும் சரியாக பயன்படுத்துவது.
- வருடம் தோறும் பட்ஜெட் போடுவது.
- அதற்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் நடத்துவது.
- இதன் கீழ், கூட்டுறவு அமைப்புகள்.
- கோவில் நிர்வாகங்கள்.
- அரசுக்கு சொந்தமான இடங்கள்.
- நீர் மற்றும் நில வளங்கள்.
- கனிம வளங்கள்.
போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்து,
- கூட்டுறவு அமைப்புகள், முறையாக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் குழு செயல் படுத்தப்பட வேண்டும்..
- கோவில் நிர்வாகமும், ஊர் மக்களை கூட்டி, ஊர் மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவால் கோவில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்.
- கிராம மற்றும் நகர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி கண்காணிப்பில், மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இயக்கப்பட வேண்டும்.
தற்போது நடப்பது என்ன? மேற்படி அனைத்து அதிகாரங்களும் அந்த 30 பேரிடத்தில். இந்த 30 பேரும் யார்?
- நிரந்தர கொள்கையில்லாத பணத்துக்காக அடிக்கடி கட்சி மாறுபவர்கள், கூட்டணிகள் மாறுபவர்கள்.
- ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குபவர்கள்.
இவர்களிடமே ஒட்டுமொத்த அதிகாரமும் சென்றால் விட்டால், மாநிலம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி இருப்பார்கள்? கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
தற்போது நடைமுறையே உங்களுக்கு புரியும். உள்ளாட்சி அமைப்புகளை இவ்வளவு காலம் இவர்கள் முடக்கி வைத்திருப்பதின் சதி உங்களுக்கு புரிந்து இருக்கும்.
சட்ட திருத்தம் 73 மற்றும் 74 ன் படி நடத்த சொல்லியும், பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியவர்கள், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இறுக்கிறது.
ஆனால், விடமாட்டார்கள். அதிகாரத்தை விட மாட்டார்கள். ருசி கண்ட பூனைகள், பணமழை நிச்சயம் விடாது அடைமழையாக பெய்யும். அனுபவப்பட்ட நீங்கள் இனிமேலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
- புதிய திட்டத்துடன்,
- ஊழல் ஒழிப்பு லட்சியம் கொண்ட,
- நேர்மையான,
- துணிச்சலான,
- பேராண்மை, பேராற்றல் கொண்ட, ஆம் ஆத்மி கட்சி இளைஞர்கள்.
- அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், இளம் பெண்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அவர்கள் பங்களிப்புடன், கிராம நகர பஞ்சாயத்து தேர்தலில் களம் கான வருகிறது. தனது துடைப்பம் சின்னத்துடன். ஆதரவு தாரீர்.
தொகுப்பு:
கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு: